en banner

OIPவடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவ சமூகம் எதிர்கொள்ளும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு முக்கிய படியாக, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 1,127.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

[06:24, 22/08/2025] Hisham Media Secretary: மீன்பிடி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதில் உள்ள முக்கிய தடையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

“ எவ்வித சாத்தியக்கூறு ஆய்வுகளுமின்றி கிழக்கு மாகாண மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம், இன்று மணல் மேவிப் பயன்பட முடியாத நிலையில் இருப்பதால், மாகாணத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் வாழைச்சேனை துறைமுகத்திற்கு வர வேண்டியுள்ளது. 300 படகுகளுக்கு மட்டுமே வசதியுள்ள வாழைச்சேனை துறைமுகத்திற்கு 500 முதல் 800 படகுகள் வரை வருவதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாயந்த இந்த முடிவின் மூலம், அந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை வழங்க அரசு எதிர்பார்க்கிறது,” என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம் 2026 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் கீழ், தற்போதுள்ள இறங்குதுறையை மேலும் 300 மீட்டரால் நீடித்தல், துறைமுகத்தின் உள் வீதி வசதிகளை அமைத்தல் உட்பட பல நவீன வசதிகளை வழங்குவதன் மூலம் துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு மேலதிகமாக, வடக்கு மாகாணத்தின் மீன்பிடி உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்:
* மயிலிட்டி துறைமுகம்: இதனை மேம்படுத்துவதற்காக ரூபா 280 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் பணிகள் இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* கொழும்புத்துறை துறைமுகம்: இதனை முழுமையாகக் கட்டியெழுப்புவதற்காக ரூபா 165 மில்லியன் நிதியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
* குருநகர் மற்றும் பேசாலை: யாழ்ப்பாணம்-குருநகர் பகுதியில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கும், மன்னார்-பேசாலைப் பகுதியில் மக்கள் கோரிக்கைக்கு அமைய அடுத்த வருடம் ஒரு புதிய துறைமுகத்திற்கான திட்டங்களை வகுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் மூலமும் மீனவ சமூகத்தை வலுவூட்டி, நாட்டின் மீன்பிடித் தொழிலை ஒரு உயர் மட்டத்திற்கு உயர்த்துவதே அரசின் ஒரே நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
[06:24, 22/08/2025] Hisham Media Secretary: වාලච්චේන ධීවර වරාය වැඩි දියුණු කිරීමට රුපියල් මිලියන 1127.5ක දැවැන්ත ව්‍යාපෘතියකට කැබිනට් අනුමැතිය

උතුරු සහ නැගෙනහිර පළාත්වල ධීවර ප්‍රජාව මුහුණ දෙන යටිතල පහසුකම් ගැටලු විසඳීමේ තීරණාත්මක පියවරක් තබමින්, වාලච්චේන ධීවර වරාය වැඩිදියුණු කිරීම සඳහා රුපියල් මිලියන 1127.5ක ප්‍රතිපාදනයක් ලබා දීමට අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය හිමි වූ බව ධීවර, ජලජ හා සාගර සම්පත් අමාත්‍ය, ගරු රාමලිංගම් චන්ද්‍රසේකර් මහතා ප්‍රකාශ කරයි.

ධීවර අමාත්‍යාංශයේ පැවති මාධ්‍ය හමුවකදී අදහස් දක්වමින් අමාත්‍යවරයා පෙන්වා දුන්නේ, උතුරු සහ නැගෙනහිර පළාත්වල ධීවර වරායන්හි පවතින ඌනතාවය ධීවර කර්මාන්තය නගා සිටුවීමට ඇති ප්‍රධාන බාධාවක් බවයි.

"නැගෙනහිර පළාතේ ධීවරයින් සඳහා ඉදිකළ ඔලුවිල් වරාය, අද වන විට වැලි ගොඩක් බවට පත්ව භාවිතයට ගත නොහැකි වීම නිසා, සමස්ත පළාතේම ධීවරයින්ට වාලච්චේන වරාය වෙත පැමිණීමට සිදුව තිබෙනවා. යාත්‍රා 300ක් සඳහා පමණක් පහසුකම් ඇති වාලච්චේන වරායට, යාත්‍රා 500ත් 800ත් අතර ප්‍රමාණයක් පැමිණීම නිසා දැඩි තදබදයක් සහ පීඩනයක් නිර්මාණය වී තිබෙනවා. මෙම ඓතිහාසික තීරණය හරහා එම ගැටලුවට ස්ථිර විසඳුමක් ලබා දීමට රජය අපේක්ෂා කරනවා," යැයි අමාත්‍යවරයා සඳහන් කළේය.

මෙම ව්‍යාපෘතිය 2026 වසරේ ආරම්භ කිරීමට නියමිත අතර, ඒ යටතේ පවතින ජැටිය මීටර් 300කින් දීර්ඝ කිරීම සහ වරාය අභ්‍යන්තර මාර්ග පහසුකම් ඉදිකිරීම ඇතුළු නවීන පහසුකම් රැසක් සැලසීම තුළින් වරායේ ධාරිතාව ඉහළ නැංවීමට නියමිතය.

මෙම ව්‍යාපෘතියට අමතරව, උතුරු පළාතේ ධීවර යටිතල පහසුකම් සංවර්ධනය සඳහා රජය තවත් පියවර කිහිපයක් ගෙන ඇති බවද අමාත්‍යවරයා මෙහිදී අවධාරණය කළේය:
* මයිලිඩ්ඩි වරාය: වැඩි දියුණු කිරීම සඳහා රුපියල් මිලියන 280ක් වෙන් කර ඇති අතර, එහි වැඩ කටයුතු මෙම වසර තුළ නිම කිරීමට අපේක්ෂිතය.
* කොළඹුතුරේ වරාය: සම්පූර්ණයෙන් ගොඩනැගීම සඳහා රුපියල් මිලියන 165ක් යටතේ වැඩ ආරම්භ කර ඇත.
* ගුරුනගර් සහ පේසාලේ: යාපනය-ගුරුනගර් ප්‍රදේශයේ නව ධීවර වරායක් ඉදිකිරීමටත්, මන්නාරම-පේසාලේ ප්‍රදේශයේ ජනතා ඉල්ලීම පරිදි නව වරායක් සඳහා ලබන වසරේදී සැලසුම් කිරීමටත් කටයුතු යොදා ඇත.

මෙම සියලු සංවර්ධන ව්‍යාපෘති හරහා ධීවර ප්‍රජාව සවිබල ගන්වා, මෙරට ධීවර කර්මාන්තය ඉහළ තලයකට ඔසවා තැබීම රජයේ ඒකායන අරමුණ බව අමාත්‍යවරයා වැඩිදුරටත් පැවසීය.

சமீபத்திய செய்திகள்

Youtube