நோக்கம்
கடற்றொழில் நீரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதியான பயன்பாடு சம்பந்தமாக தெற்கு ஆசிய வலயத்தில் அற்புத நாடாக ஆக்குதல்.
தேசிய மீன்வர் சம்மேளனம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் பணிப்பாளர் சபை கூட்டத்தை ஜனவரி 28 அன்று அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது, இந்நிகழ்வில் கடற்றொழில்,...
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய அவர்களால் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தின நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) ...
உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது.
புதிய செயலகம்,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை
கௌரவ இராஜாங்க அமைச்சர்
கௌரவ பியல் நிஷாந்த த சில்வா
கடற்றொழில் இராஜாங்க அமைச்சு
தொலைபேசி | : | +94 112 446 188 |
பெக்ஸ் | : | +94 112 446 187 |
மின்னஞ்சல் | : | stateminister[at]fisheries.gov.lk |
எச்.எம். பியல் நிஷாந்த த சில்வா (பிறப்பு 1970 ஜூன் 30) இலங்கை அரசியல்வாதியூம் மற்றும் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினருமாவார்.
கல்வி
திரு பியல் நிஷாந்த அவர்கள் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை அலுத்கம தேசிய பாடசாலையில் கற்றார். அதன் பின்னர் அவர் தொலைதூரக் கல்வி நிலையத்தில் டிப்ளோமா பாநெறியை தோற்றினார் 1993ஆம் ஆண்டிலும் கலை மற்றும் திரையரங்கு பற்றிய ஆசிரியரானார்.
அரசியல் வாழ்க்கை
திரு.பியால் நிஷாந்த அவர்கள் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுவாமோதர கிராம உத்தியோகத்தர் பிரிவில் செயலாளராக தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். 1997 இல் பேருவளை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அவர் 2006 இல் பேருவளை பிரதேச சபையின் தலைவராக ஆனார்.திரு.பியால் நிஷாந்த அவர்கள் 1996 ஆம் ஆண்டு களுவாமோதர கிராம அலுவலர் பிரிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். 1997 இல் பேருவளை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அவர் 2006 இல் பேருவளை பிரதேச சபையின் தலைவராக ஆனார்.
2009ஆம் ஆண்டு மேல் மாகாண சபைக்குத் தெரிவானார். அவர், 2015ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக நாடாளுமன்றம் நுழைந்தார்.
அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவை பிரதிநிதித்துவப்படுத்தி 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் 16வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். 2020 ஆகஸ்ட் 12 அன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி, பாலர் மற்றும் ஆரம்பக் கல்வி, பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2022 செப்டம்பர் 08 அன்று, அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் இரண்டாவது அமைச்சரவையின் கீழ் கடற்றொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கௌரவ திரு. இராமலிங்கம் சந்திரசேகர்
அமைச்சர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு
![]() |
செல்வி கே. என். குமாரி சோமரத்னா செயலாளர் |
![]() |
திருமதி. என். ஏ. ஏ. பீ. எஸ். நிஸ்ஸங்க மேலதிக செயலாளர் (நிர்வாகம் மற்றும் மனித வளங்கள்) |
![]() |
திருமதி அனுஷா கோகுல பெர்னாண்டோ கூடுதல் செயலாளர் (மாநில அமைச்சரின் ஒருங்கிணைப்பு) |
![]() |
திரு. தம்மிக்க ரணதுங்க மேலதிக செயலாளர் (மீன்வள மேலாண்மை) |
|
திரு. எச். எம். கே. ஜே. பீ. குணரத்ன மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) |
![]() |
திருமதி. ஏ. எச். எஸ். பரீதா பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) |
![]() |
திரு. கே. கே. ஏ. பியசேன பணிப்பாளர் நாயகம் (பொறியியல்) |
![]() |
திருமதி ஜே.ஏ.டபிள்யூ.கே.ஜெயக்கொடி பிரதமநிதி உத்தியோகத்தர் |
கடற்றொழில் மற்றும் கடற்றொழில் உற்பத்திக்கு தேசிய மற்றும் சர்வதேச சந்தைக்குள் நிலவும் கோரல் அதிகமாக இருப்பதன் காரணமாக கரையோர அரசுக்கு தனது தேசிய பொருளாதாரத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கைத்தொழிலின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தின் ஊடாக நிலையான பிரதிபலனைப் பெற்றுக் கொள்வதற்கு கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கைக் கைத்தொழில் அடித்தளமாக உள்ள வளங்களை அளவுக்கதிகமாக அறுவடை செய்யாமல் அவற்றின் உற்பத்தியை பேணுவது அவசியமாகும். இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கையின் அபிவிருத்திக்கு புதிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த துறைக்குள் முதலீடு செய்வதற்கு தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பது அரசின் பொது பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி கொள்கைக்கு அனுகூலமாக தாபிக்கப்பட்ட தேசிய கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கொள்கை ஒன்றாக உள்ளது. இதன் மூலம் கடற்றொழில் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவத்துக்கான பிராந்திய மற்றும் சர்வதேச கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு துறைசார் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துக்கு அனுகூலமான பொறுப்புகளை ஏற்படுத்துவது அவசியமாகும்.
இவ்வாறான நிலையின் கீழ் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு அதன் கீழ் செயற்படும் திணைக்களம் மற்றும் முகவர் நிலையங்களுடன் இணைந்து விரிவான ஆலோசனைகளைக் கைக்கொண்டு இந்த ஆவணத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையைத் தயாரிப்பதற்குத் தேவையான ஆலோசனை சேவையை நோர்வே அரசின் வர்த்தக, கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச செய்கை திணைக்களத்தினால் இரு தரப்பு பங்களிப்பு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு : தேசிய மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கொள்கை பார்க்கவும்.