கடற்றொழில் மற்றும் கடற்றொழில் உற்பத்திக்கு தேசிய மற்றும் சர்வதேச சந்தைக்குள் நிலவும் கோரல் அதிகமாக இருப்பதன் காரணமாக கரையோர அரசுக்கு தனது தேசிய பொருளாதாரத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கைத்தொழிலின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தின் ஊடாக நிலையான பிரதிபலனைப் பெற்றுக் கொள்வதற்கு கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கைக் கைத்தொழில் அடித்தளமாக உள்ள வளங்களை அளவுக்கதிகமாக அறுவடை செய்யாமல் அவற்றின் உற்பத்தியை பேணுவது அவசியமாகும். இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கையின் அபிவிருத்திக்கு புதிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த துறைக்குள் முதலீடு செய்வதற்கு தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பது அரசின் பொது பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி கொள்கைக்கு அனுகூலமாக தாபிக்கப்பட்ட தேசிய கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கொள்கை ஒன்றாக உள்ளது. இதன் மூலம் கடற்றொழில் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவத்துக்கான பிராந்திய மற்றும் சர்வதேச கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு துறைசார் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துக்கு அனுகூலமான பொறுப்புகளை ஏற்படுத்துவது அவசியமாகும்.
இவ்வாறான நிலையின் கீழ் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு அதன் கீழ் செயற்படும் திணைக்களம் மற்றும் முகவர் நிலையங்களுடன் இணைந்து விரிவான ஆலோசனைகளைக் கைக்கொண்டு இந்த ஆவணத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையைத் தயாரிப்பதற்குத் தேவையான ஆலோசனை சேவையை நோர்வே அரசின் வர்த்தக, கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச செய்கை திணைக்களத்தினால் இரு தரப்பு பங்களிப்பு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு : தேசிய மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கொள்கை பார்க்கவும்.