en banner

WhatsApp Image 2026 04 22 at 11.35.58

நோர்வேயின் பெர்கன் (Bergen) நகரில் நடைபெற்று வரும் ‘One Ocean Week’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், உலகின் முன்னணி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் மீன் தீவன உற்பத்தி நிறுவனமான கார்கில் (Cargill) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தர்ஜே ஈட் (Tarjei Eide) உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகத்தினருடன் நேற்று (21) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

160 வருடகால சிறப்புமிக்க வரலாற்றைக் கொண்ட கார்கில் நிறுவனம், 70 நாடுகளில் ஒரு இலட்சத்து ஐம்பத்து ஐந்தாயிரத்திற்கும் (155,000) மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய சால்மன் மற்றும் இறால் தீவன உற்பத்தி நிறுவனமாகும்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக உயர்தர மீன் தீவனங்களைப் பெற்றுக்கொள்வது மற்றும் அதற்கான மூலப்பொருட்களை வழங்கும் வணிக வாய்ப்புகள்  குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இலங்கையில் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் தொழிற்துறையை ஊக்குவிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அமைச்சர் இங்கு விளக்கமளித்தார்.

இலங்கையிலுள்ள வணிக மாதிரி மற்றும் முதலீட்டு சாத்தியக்கூறுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்த அழைப்பை கார்கில் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் ஏற்றுக்கொண்டனர். அதற்கமைய, அவர்கள் விரைவில் இலங்கைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீர் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே. கஹவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

Youtube