en banner

WhatsApp Image 2025 07 04 at 09.55.01 1

இலங்கையின் கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்கும் மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வலுப்படுத்தும் முகமாக, அவுஸ்திரேலியாவின் உதவியின் கீழ், சர்வதேச புலம்பெயர்வு ஸ்தாபனம் (IOM) கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்களத்திற்கு 50 டப்லெட் கருவிகளை நன்கொடையாக வழங்கியது.

IOM இன் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் இஓரி கடோ (Iori Kato) அவர்களின் இலங்கை உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோளித கமல் ஜினதாசவிடம் (Dr. B. K. Kolitha Kamal Jinadasa) இந்த நன்கொடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த விஜயம் இலங்கையில் IOMஇன் திட்டங்களை அவதானிப்பதையும் எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

தனது விஜயத்தின் போது, கடோ அவர்கள் பேருவளை கடற்றொழில் துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர், கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்களத்தின் கடற்றொழில் கண்காணிப்பு மையத்திற்கு (FMC) சென்றார். அங்கு, FMC இன் செயற்பாடுகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கான ஒரு ஒருங்கிணைப்பு மையமாகவும் நிலையான கடற்றொழில் முகாமைத்துவத்திற்கான அதன் பங்களிப்பு குறித்தும் பணிப்பாளர் விவரங்களை கேட்டறிந்துகொண்டார். மேலும், IOM மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்களம் (DFAR) இடையேயான தற்போதைய கூட்டாண்மையை வலுப்படுத்தி, நிலையான மற்றும் விரிவான ஒத்துழைப்பிற்கான மூலோபாய வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போது, நடைமுறையில் உள்ள கப்பல் கண்காணிப்பு முறைமை (VMS) இக்குழுவால் அவதானிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே. கஹவத்த (S. J. Kahawatta) மற்றும் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய எல்லைப் படைப் பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

Youtube