WhatsApp Image 2024 01 29 at 1.19.37 PM 2

உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது. 

WhatsApp Image 2024 01 17 at 3.25.22 PM

கடல் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றான CM Blue Crabs தனியார் நிறுவனம் நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று 2024.01.16ஆந் திகதி மன்னார் பிரதேசத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

DSC 0195 1

ILO C 188 - 2007 மீன்பிடி கைத்தொழில் மற்றும் அது தொடர்பான தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கு தயாரிகப்பட்டுள்ள இலங்கை தொடர்பான வரைவின் ஒழுங்குவிதிக் கோவை கடற்றொழில் அமைச்சருக்கு மற்றும் தொழில் அமைச்சருக்கு வழங்குவதற்கான 2023.12.08ஆந் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

WhatsApp Image 2023 12 04 at 12.14.282

கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குரிய புதுமுறிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள நன்னீர் குளங்களுக்கு 02 இலட்சம் மீன் குஞ்சுகளை விடுவிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த 19ஆந் திகதி மீன் குஞ்சுகளை விடுவிக்கும் தேசிய வைபவத்தின் முதற் கட்டமாக 150,000 மீன் குஞ்சுகளும் 2023.12.04ஆந் திகதி இரண்டாம் கட்டமாக 50,000 மீன் குஞ்சுகளும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் விடுவிக்கப்பட்டது.

WhatsApp Image 2023 11 22 at 12.26.11 PM

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார்  அபிவிருத்திகளுக்காக  ஜப்பான் அரசாங்கம்  03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தம் இன்று (22.11.2023) நிதி அமைச்சில்;  கைச்சாத்திடப்பட்டது.

mini

சீனக் குடியரசினால் இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட  மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல் திட்டம் கடந்த 02ம் திகதி முதல் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. 

regulation

கடற்றொழில் அமைச்சரினால் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய கடற்றொழில் சட்டத்தின் மூலம் தேசிய மீனவ சம்மேளனத்தின் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், சம்மேளனம் மற்றும் கிராமிய மீனவ சங்கங்களின் பொறுப்புகள் கடற்றொழில் அமைச்சுக்கு வருமென தேசிய மகா சம்மேளனத்தின் பிரதான செயலாளர் திரு நெல்சன் எதிரிசிங்க அவர்கள் தெரிவித்ததார்.

DSC 0996

இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி (Dr. Satyanjal Pandey)  ஆகியோர்களுக்கிடையிலான கலந்துரையாடல் 2023.09.23ஆந் திகதி (இன்று) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

349015496 207307668816034 2814305711465241842 nஇலங்கை கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

Youtube