தேசிய மீனவ மகா சம்மேளனம்
மீனவ சமூகம் மற்றும் கடற்றொழில் கைத்தொழிலில் நிலையான அபிவிருத்திக்கு வசதிகளை வழங்கும் நோக்கில் தேசிய மீனவர் சம்மேளனம் 2010ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக சக்திமிக்க நவீன உலகுக்கு ஏற்ற வகையில் துணிகரமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதே தேசிய மீனவர் சம்மேளனத்தின் நோக்கமாகும்.
பேலியகொட அதி நவீன மத்திய மீன் விற்பனை சந்தை கட்டிடத் தொகுதி
2006ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கு அமைவாக கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள சென் ஜோன்ஸ் மீன் சந்தைக்குப் பதிலாக நவீன மத்திய மீன் விற்பனை சந்தைக் கட்டிடத் தொகுதி நிறுவுவதற்கு இலங்கை அரசினால் சில நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டன. அவையாவன,
- நுகர்வோர்களுக்கு சுகாதார பாதுகாப்புமிக்க உயர் தரமான மீன்களை சாதாரண விலைக்கு வழங்குதல்.
- ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைக்கு அமைவாக மீன் விற்பனையை முன்னெடுத்தல்.
- நுகர்வோர் மற்றும் வியாபாரிகளுக்குப் போதுமான இடவசதி மற்றும் ஏனைய வசதிகளை வழங்குதல்.
- சென் ஜோன் சந்தைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள வீதிகளில் இருக்கும் வாகனங்கள் சிரமமின்றி திருப்புதல், வியாபாரிகளுக்கு மற்றும் நுகர்வோர்களுக்கு வாகன நிறுத்துவதற்கான வசதிகளை வழங்குதல்.
இலங்கை அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியைப் பயன்படுத்தி பேலியகொடையில் நவீன மத்திய மீன் விற்பனை சந்தைத் தொகுதி கட்டிடம் நிறுவப்பட்டுள்ளது. 3.17 ஹெக்டயர் நிலப் பரப்பில் மிகப் பெரியதான பூமியின் அரைவாசி பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த நவீன மத்திய மீன் விற்பனை சந்தைத் தொகுதி கட்டிடத்தில் 148 மொத்த மீன் விற்பனை கூடங்களும், 128 சில்லறை மீன் விற்பனை கூடங்களும், நாளாந்தம் 25 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட கட்டி ஐஸ் தொழிற்சாலைகளும், மூன்று குளிரூட்டிகளும், நவீன போசனசாலை, வங்கி வசதி, தபாற் கந்தோர், பொலிஸ் காவல் அரண், தரக் கட்டுப்பாட்டு ஆய்வு கூடம் போன்ற பிரிவுகளும் தேவையான வசதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதற்கு மேலதிகமாக 500 வாகனங்கள் தரித்து நிற்கும் வசதியும் இந்த தொகுதியில் அமைந்துள்ளது.