நிர்வாகப் பிரிவு
கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் மனித வள முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பொறுப்பு மற்றும் முன்னிலைப்படுத்தும் பொறுப்புளைக் கொண்டது இந்த பிரிவாகும். அமைச்சின் கடற்றொழில் நடவடிக்கை, அடிப்படை வசதிகள் அபிவிருத்தி மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு சாட்டப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் கடமைகள், நன்னீர் மீன் மற்றும் அலங்கார மீன்கள் வளர்த்தல் மற்றும் அத்துறையை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட சாதகமான விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான அலுவலர்களை ஈடுபடுத்தல், தொழில் ரீதியாக மற்றும் நிறுவனப் பயிற்சி, நிருவாகம் உட்பட மனித வள அபிவிருத்தி மற்றும் ஆளணியினர்களுக்கு தமது அரச பணிகளின் பொறுப்புளை முன்னெடுப்பதற்கு பொருத்தமான அலுவலக சூழலை ஏற்படுத்தி அமைச்சின் தொலைத்தொடர்பு மசோதா, போக்குவரத்து, பாதுகாப்பு, பராமரிப்பு, சுகாதார ஏற்பாடு போன்ற வசதிகளை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் இதற்கு மேலதிகமாக அமைச்சுடன் இணைந்து செயற்பட்டுவரும் நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைளை இணைப்பது இந்தப் பிரிவாகும்.
நிறுவன கட்டமைப்பு
நிதிப் பிரிவு
நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு உரமூட்ட விலைநிர்ணய விதிமுறை நடைமுறைகளுக்கு அமைவாக, சட்ட வரையரைக்குள் அமையக் கூடியதாக முறையான நிதி முகாமைத்துவத்தை முறையாக மேற்கொள்வது இந்தப் பிரிவின் நோக்கமாகும்.
இதற்கமைய அபிவிருத்தி செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களுடன் கூட்டிணைந்து செலவிடல், முறையான கணக்காய்வு மேற்கொள்ளல், கணக்கைப் பேணுவதும் இதன் எதிர்ப்பாகும். அமைச்சுக்குரிய வருடாந்த வரவு செலவு மதிப்பீட்டில் இயன்றளவு நிறைவாக, சரியாக, உடன்பாடு காணல் மற்றும் வினைத்திறனைக் கொண்டு முறையாக கவனம் செலுத்தி முறையாக மேற்கொள்ளப்படுவதுடன் அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் முறையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல், முறையாக பாராளுமன்ற கணக்கு செயற்குழு மற்றும் பொது வர்த்தக சபையின் விசாரணைக்கு பதில் வழங்கல் மற்றும் அவற்றின் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ளல்.
நிறுவன கட்டமைப்பு
திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவின்
நாட்டின் தேசிய அபிவிருத்திக் கொள்கையில் எதிர்பார்க்கும் நோக்கத்தின் இலக்கை அடைவதற்கு தயாரிக்கும் தேசிய திட்டத்துக்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரிவிற்கு வழங்கக்கூடிய முறையான பங்களிப்பை உச்ச அளவில் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டமிடலின் அடிப்படையில் கொள்கை தயாரித்தல்.
இவ்வாறு தயாரிக்கும் கொள்கையை முறையாக மற்றும் செயற்றிறனுடன் செயற்றுவற்குத் தேவையான வேலைத் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரிவு இணைந்து நிதி மற்றும் பௌதீக வளங்களை முகாமைத்துவத்துடன் உச்ச அளவில் சிறந்த முறையில் பயன்படுத்தி இந்த வேலைத் திட்டத்துக்கு பொருத்தமான செயற்றிட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் இனம் காணல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமாக வழிமுறைகளைத் தயாரித்தல்.
இந்த செயற்றிட்டத்தை முறையாக பௌதீக மற்றும் நிதி முகாமைத்துவத்துடன் செயற்றிறன் மற்றும் முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைத் திட்டங்களைத் தயாரித்தல், இந்த திட்டத்தின் அடிப்படைக்கு உரிய இலக்கை அடைவதற்கு நடைமுறைகளைத் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தி, அதன் முன்னேற்றம் மற்றும் எதிர்பார்ப்பு பெறுபேறு வாராந்தம், மாதாந்தம், காலாண்டு மற்றும் வருடாந்தம் மீளாய்வுக்கு உட்படுத்தி முறையான நடைமுறைக்கு பாதிப்புக்கான பிரச்சனை, மற்றும் பாதிப்புகளை முறையாக இனம் கண்டு வெற்றி கொள்வதற்குத் தேவையான வழிமுறைகளை இனம் காணல் மற்றும் அந்த நடைமுறையின் ஊடாக எதிர்பாரக்கும் இலக்கை அடைவதற்கு பங்களித்தல்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரிவில் எதிர்பார்க்கும் இலக்கை அடைவதன் ஊடாக கிடைக்கும் பிரதிபலன்களின் பங்களிப்பை நாட்டில் தேசிய உற்பத்தியின் அபிவிருத்தியில் உச்ச அளவில் பெற்று தேசிய பொருளாதாரத்துக்கு முறையான பங்களிப்பை வழங்கும் பிரிவாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரிவு அதன் நோக்கங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதன் ஊடாக உச்ச அளவில் பங்களிப்பை வழங்குதல்.
நிறுவன கட்டமைப்பு
தொழில்நுட்ப பிரிவு
நாட்டின் தேசிய அபிவிருத்தி கொள்கையின் மூலம் எதிர்பார்க்கும் இலக்கை அடைவதற்கான பங்களிப்பை வழங்கக்கூடியளவுக்கு கடற்றொழில் துறைக்குரிய தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கச் செய்வதற்குத் தேவையான சந்தர்ப்பம் வழங்குவதற்கு, மிகவும் பொருத்தமான முதலீட்டு முறையை சிபாரிசு செய்தல், மிகவும் பொருத்தமான செயற்றிட்டத்தை ஆரம்பித்தல், செயற்படுத்தல் மற்றும் செயற்றிட்டத்துக்கு தற்போதுள்ள அரச கொள்கையின் அடிப்படையில் மேற்கொண்டு முறையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்கி அரச பணிகளை முன்னெடுத்து உச்ச பலனை அடைந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்தல்.
சர்வதேச மீன் மற்றும் நீர்வாழ் உயிரின ஏற்றுமதி துறையில் சவாலை வெற்றி கொள்ளல், நாட்டுக்கு மற்றும் மீனவ மக்களுக்கு உச்ச அனுகூலம் கிடைக்கும் வகையில் சர்வதேச மீன் மற்றும் நீர்வாழ் உயிரின ஏற்றுமதியை விருத்தி செய்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக மீன் மற்றும் நீர்வாழ் உயிரின ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தல் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கச் செய்து, நாட்டின் அண்ணிய செலவாணி அதிகரிப்புக்கு பங்களிப்பு வழங்கல்.
மக்களின் போசனை நிலையை உயர்த்துவதற்கு முதலிடமாகக் கொண்டதும் ஒதுக்கீட்டு நோக்காகக் கொண்டதும் மீள் ஏற்றுமதி நடவடிக்கையை மேற்கொண்டு மீன் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை உற்பத்திக்கு தேவையானவாறு ஏற்றுமதிக்கு மற்றும் கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு அவசியமான சகல உபகரணங்களும், தேவைக்கேற்றவாறு ஒழுங்குபடுத்தல் மற்றும் இணைப்பு நடவடிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் நிறுவனங்ளைத் தொடர்புபடுத்தல் போன்றவை இதன் பொறுப்புகளாக இருக்கின்றன.
நாட்டுக்கு மற்றும் கடற்றொழில் துறைக்கு அனுகூலமான இருதரப்பு ஒப்பந்தம் தயாரித்தல் மற்றும் சமூக நடைமுறையின் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கக் கூடிய ஒத்துழைப்பு அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச கடற்றொழில் அமைப்புகள், மற்றும் ஐக்கிய தேசியத்தின் சர்தேச கடல் கொள்கைக்கு சார்பான நடவடிக்கை அமைப்பை ஏற்படுத்தி அதன் ஊடாக மீனவ மக்கள் உட்பட அனைத்து நாட்டவர்களின் திருப்திக்கான நடவடிக்கை மேற்கொண்டு பொறுப்புகளை இணைத்து, சர்வதேச சவால்களை வெற்றி கொள்வதற்குத் தேவையான வழிமுறைகளைத் தயாரிப்பதற்கு கடற்றொழிலை மேற்கொள்வதன் ஊடாக மீனவ மக்கள் உட்பட அனைத்து நாட்டவர்களின் திருப்தியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பது இதன் அபிலாசையாகும்.
.
நிறுவன கட்டமைப்பு
அபிவிருத்திப் பிரிவு
நேரடியாக கடற்றொழில் கைத்தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் அது சார்ந்த தொழிலில் மறைமுகமாக ஈடுபடும் குழுவினர் குழுவினர் உட்பட அனைத்து மீனவ சமூகத்தினரின் வாழ்வாதார நிலையை மேம்படுத்துவது மீனவ சமூக அபிவிருத்திப் பிரிவின் செயற்பாடாகும். இதற்குத் தேவையான தரவுகள் மற்றும் தகவல்களை தயாரித்தல், ஆலோசனைகள் பெறுதல், திட்டமிடுதல், முன்னுரிமைகளை இனம் காணல், ஒதுக்கீடுகளை தயாரித்தல், செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல், இணைப்பு நடவடிக்கை மற்றும் மதிப்பீடுகள், முன்னேற்ற மீளாய்வுகள் மற்றும் பின்விபரம் தயாரித்தல் போன்ற விடயங்கள் இவ்வாறு சம்பந்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை உறுதியாக முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இந்தப் பிரிவுக்குரியதாகும்.
நிறுவன கட்டமைப்பு
உள்ளக கணக்காய்வு பிரிவு
அமைச்சுக்குரிய மற்றும் அமைச்சினால் பொறுப்பேற்ற விடயங்களின் நிதி நடவடிக்கை சம்பந்தமாக முன்னெடுத்துச் செல்லும் உள்ளக கணக்காய்வு நிருவாக முறைக்கு ஒத்துழைத்து இந்த நடவடிக்கைகளில் தவறுகள் மற்றும் மோசடிகளிலிருந்து பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்படும் உள்ளக தேடுதல்களை முறையாக மற்றும் நடவடிக்கை சம்பந்தமாக பரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடுகளை மேற்கொண்டு பிரதான கணக்கீட்டு அலுவலருக்கு அறிக்கைப்படுத்தல். அமைச்சுக்குரிய அபிவிருத்தி செயற்றிட்டங்களின் முன்னேற்றத்தை நிச்சயப்படுத்துவதற்கு கணக்கீட்டு அலுவலருக்கு அறிக்கைப்படுத்துவதற்கு உதவுதல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் இந்த கடமைகளில் ஏற்படும் செலவுகளுக்கு கணக்கீட்டு அலுவலருடன் இணைந்து செயற்படல்.
பொறியியல் பிரிவு
ஏதிர்காலத்தில் செயற்படுத்தப்படும் மற்றும் செயற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள திட்டஙகளின் பொறியல் தொடர்பான அனைத்H செயற்பாடுகளையும் மேற்பார்வையிடுவதற்கும், கண்காணிப்பதற்கும் என பணிகள் பொறியியல் பிரிவுக்கு உரித்தானதாகும். இதில் பின்வரும் செயற்பாடுகள் அடஙகும்.
- EIA, IEE போன்ற அறிக்கைகளின் தொழில்நுட்ப முன்மொழிவுகளின் சாத்தியக் கூறுகள் பெறுதல் மற்றும் திட்டமிடலின்போது அவற்றை மதிப்பீடு செய்தல்.
- அனைத்து நிர்மாண நடவடிக்கைகளின் செயற்பாடு மற்றும் நிதி முன்னெற்றத்தைக் கண்காணித்தல்.
- அனைத்து நிர்மாண நடவடிக்கைகளின் தர உத்தரவாத அம்சங்களைக் கண்காணித்தல்.
- மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மான செயற்றிட்டங்களின் நிதிக் கட்டுப்பாடு மற்றும் இடைக்கால மற்றும் இறுதி பொடுப்பனவுகளுக்கு சான்றுகளை அங்கீகரித்தல்.
- ஓப்பந்த கடமைகளின்படி தள நிலைமகள் மற்றும் எதிர்பாராத சூழ்நிழலயைப் பொறுத்து மாறுபாடுகளில் கலந்து கொள்வது மற்றும் அசல வடிவமைப்பு அமைவாக புதுப்பித்தல்.
- ஆலோசனை/ நிர்மாணம், வாடிக்கையாளர் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைத்தல்.
- ஏதிர்காலத்தில பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நிர்மாணத்தின்போது பொருத்தமான தீர்வுகள் அல்லது தணிப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்.
நிறுவன கட்டமைப்பு
புள்ளிவிபரவியல் பிரிவு
அமைச்சின் நோக்கங்களை முன்னெடுத்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களில் முறையான முகாமைத்துவத்துடன் கடற்றொழில் கைத்தொழிலில் உறுதியான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் திட்டங்களை வகுப்பதற்கு, அவற்றின் முன்னேற்றத்தை அறிவதற்கு இவ்வாறு தேசிய மற்றும் சர்வதேச மதிப்பீடு மற்றும் வெளிப்படுத்தல்களைத் தயாரிப்பதற்குத் தேவையான தரவுகள் சேகரித்தல் மற்றும் மீளாய்வு செய்தல் மற்றும் அதனை வெளிப்படுத்துவதே இப்பிரின் நோக்கமாகும்.