கடந்த தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின்போது மரணமடைந்த மற்றும் பாதிப்படைந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவது அவசியமானதென கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சரவையில் பிரதம மந்திரியுடன் இணைந்து சமர்ப்பித்த மேற்படி விடயம் சம்பந்தமாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய அந்த யுத்தத்தின்போது ஏற்பட்ட பாதிப்பு மற்றும் யுத்தத்தின் காரணமாக மரணமடைந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி அதற்கு முறையான உதவிகளை வழங்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கௌரவ பிரதம மந்திரியுடன் கலந்துரையாடி இது சம்பந்தமாக அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கான கருத்து மற்றும் ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய தாமதிக்காது ஒரு நாளைக்குள் இதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கினார்.