கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தமது அமைச்சுக்குரிய நிறுவனத்துக்கு உயர் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
கடற்றொழில் கைத்தொழில் நடவடிக்கைக்குத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான சீ – நோர் முகவர் நிறுவனத்தின் புதிய தலைவராக திரு அசங்க நவரத்ன அவர்கள் 2020.02.03ஆந் திகதி முற்பகல் நிறுவனத்தின் வளாகத்தில் தனது பதவிக்கான கடமைகளைப் பொறுப்பேற்றார் திரு அசங்க நவரத்ன அவர்கள் இலங்கை மக்கள் கட்சியின் தலைவராக இருப்பதுடன் வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குருனாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். இவர் குருனாகல் மாவட்டத்தின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரான திரு ரஞ்சித் நவரத்ண அவர்களின் புதல்வராவார்.
இங்கு இச்சந்தர்ப்பத்தில் ஊடக செயலாளர் திரு நெல்சன் எதிரிசிங்க அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.