தொழில்நுட்ப பிரிவு
நாட்டின் தேசிய அபிவிருத்தி கொள்கையின் மூலம் எதிர்பார்க்கும் இலக்கை அடைவதற்கான பங்களிப்பை வழங்கக்கூடியளவுக்கு கடற்றொழில் துறைக்குரிய தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கச் செய்வதற்குத் தேவையான சந்தர்ப்பம் வழங்குவதற்கு, மிகவும் பொருத்தமான முதலீட்டு முறையை சிபாரிசு செய்தல், மிகவும் பொருத்தமான செயற்றிட்டத்தை ஆரம்பித்தல், செயற்படுத்தல் மற்றும் செயற்றிட்டத்துக்கு தற்போதுள்ள அரச கொள்கையின் அடிப்படையில் மேற்கொண்டு முறையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்கி அரச பணிகளை முன்னெடுத்து உச்ச பலனை அடைந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்தல்.
சர்வதேச மீன் மற்றும் நீர்வாழ் உயிரின ஏற்றுமதி துறையில் சவாலை வெற்றி கொள்ளல், நாட்டுக்கு மற்றும் மீனவ மக்களுக்கு உச்ச அனுகூலம் கிடைக்கும் வகையில் சர்வதேச மீன் மற்றும் நீர்வாழ் உயிரின ஏற்றுமதியை விருத்தி செய்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக மீன் மற்றும் நீர்வாழ் உயிரின ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தல் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கச் செய்து, நாட்டின் அண்ணிய செலவாணி அதிகரிப்புக்கு பங்களிப்பு வழங்கல்.
மக்களின் போசனை நிலையை உயர்த்துவதற்கு முதலிடமாகக் கொண்டதும் ஒதுக்கீட்டு நோக்காகக் கொண்டதும் மீள் ஏற்றுமதி நடவடிக்கையை மேற்கொண்டு மீன் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை உற்பத்திக்கு தேவையானவாறு ஏற்றுமதிக்கு மற்றும் கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு அவசியமான சகல உபகரணங்களும், தேவைக்கேற்றவாறு ஒழுங்குபடுத்தல் மற்றும் இணைப்பு நடவடிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் நிறுவனங்ளைத் தொடர்புபடுத்தல் போன்றவை இதன் பொறுப்புகளாக இருக்கின்றன.
நாட்டுக்கு மற்றும் கடற்றொழில் துறைக்கு அனுகூலமான இருதரப்பு ஒப்பந்தம் தயாரித்தல் மற்றும் சமூக நடைமுறையின் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கக் கூடிய ஒத்துழைப்பு அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச கடற்றொழில் அமைப்புகள், மற்றும் ஐக்கிய தேசியத்தின் சர்தேச கடல் கொள்கைக்கு சார்பான நடவடிக்கை அமைப்பை ஏற்படுத்தி அதன் ஊடாக மீனவ மக்கள் உட்பட அனைத்து நாட்டவர்களின் திருப்திக்கான நடவடிக்கை மேற்கொண்டு பொறுப்புகளை இணைத்து, சர்வதேச சவால்களை வெற்றி கொள்வதற்குத் தேவையான வழிமுறைகளைத் தயாரிப்பதற்கு கடற்றொழிலை மேற்கொள்வதன் ஊடாக மீனவ மக்கள் உட்பட அனைத்து நாட்டவர்களின் திருப்தியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பது இதன் அபிலாசையாகும்.
.
நிறுவன கட்டமைப்பு
