இந்திய தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கடலட்டை செய்கை நிலத்துக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்தல் மற்றும் கடலட்டை இனப்பெருக்க மையம் ஒன்றை நிறுவுவது பற்றிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மன்னார் ஓலைத்தெடுவாயில் அமைந்துள்ள கடலட்டை இனப்பெருக்க மையத்தில் இன்று (2022.10.14) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இந்திய தனியார் முதலீட்டாளர்களின் தூரநோக்கு மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடலட்டை இனப் பெருக்க மையம் மற்றும் குஞ்சுகள் பெருக்கும் கூடங்கள் சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து பார்க்கப்பட்டதுடன் கடற்றொழில் கைத்தொழிலில் ஈடுபடும் மக்களுக்கு நிலைபேறான பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் இந்த கடலட்டை செய்கை செயற்றிட்டத்துக்கு இந்திய தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கடட்டை செய்கைக்கு சர்வதேச ரீதியில் அதிக கோரிக்கை நிலவும் இச்சந்தர்ப்பத்தில் இக்கலந்துரையாடல் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.
மன்னார் ஓலைத்தெடுவாய் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள கடலட்டை இனப்பெருக்க நிலையத்தின் பணிகளைப் பார்வையிட்ட இந்திய தனியார் முதலீட்டாளர்கள், இந்த மையத்தின் உற்பத்தி திறனை மேலும் அதிகரிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடினார்