இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் H.E MIZUKOSHI HIDEAKI அவர்கள் 2023.11.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்தார் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளின் பேரில் இலங்கையில் மீன்பிடி நடவடிக்கையை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பானிய அரசாங்கத்தால் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்ட 435 மில்லியன் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த பணம் இலங்கையில் மீன்பிடி நடவடிக்கையின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படுவதுடன் இதி;ல் மீனவர்களுக்குத் தேவையான வலை உபகரணங்கள் வழங்குவதற்கும், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்குரிய குளிர்பதன தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கு மற்றும் மீன்பிடி படகுகளுக்குத் தேவையான எரிபொருள் மானியம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மண்ணெண்ணெயில் இயங்கும் படகுகளுக்குப் பதிலாக மின் கலங்கள் கொண்ட படகு இயந்திரங்கள் வேலைத் திட்டங்கள் குறித்து ஜப்பானிய தூதுவரிடம் கலந்துரையாடிய அமைச்சர், அதன் செயற்பாட்டுக்கு ஜப்பான் அரசாங்கம் உதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் மிகவூம் நன்றியுடையவானக இருப்பேன் என மேலும் தெரிவித்தார்.
மேலும் மீனவ மக்களின் நல்வாழ்வுக்கு மற்றும் மீன்பிடி நடவடிக்கையின் அபிவிருத்திக்காக எடுக்கக்கூடிய அனைத்து வழிமுறைகள் குறித்தும் இங்கு நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.