en banner

DSC 0465

மீன்பிடிக் கைத்தொழிலுக்குத் தற்போது பாதிப்பாக இருக்கும் பொருட்கள் விலை உயர்வு, சமுத்திர மீன் வளங்கள் குறைவடைதல், காலநிலை மாற்றம், மீன் ஏற்றுமதி செய்யூம்போது எழும் பிரச்சனைகள், நன்னீர் மீன் வளர்ப்பில் முகங்கொடுக்கும் பிரச்சனைகள், 

பல்தினப் படகு உரிமையாளர்கள் முகங் கொடுத்துள்ள பிரச்சனைகள் உட்பட அனைத்து மீன்பிடித் துறை சார்ந்து முகங்கொடுத்துள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சின் மற்றும் அது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் மீன்பிடி கைத்தொழில் தொடர்பான சகல தரப்பினர்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.08.21ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் மீன்பிடிக் கைத்தொழிலை பாதிக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைக்கள் உடனடியாக எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இவ்வாறான சந்திப்பு மாதத்துக்கு ஒருமுறை நடாத்துவவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கமைய சம்பந்தப்பட்ட துறையில் நிலவும் பிரச்சனைகள் அத்துறைகளின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளினால்  சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும், அதற்கமைய அவற்றை உடனடியாகத் தீரப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியூமெனவும், தெரிவித்தார். மேலும் தற்போது மீனின் விலை அதிகரிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்த பின், அதற்கு காலநிலை மாற்றங்களினால் தென்மேற்கு பருவக்காற்று முறையாக வராததால் கடல் நீர் வெப்பமடைந்து மீன்கள் பாதிக்கப்படுவதே இதற்கு காரணம் என சுட்டிக் காட்டப்பட்டது. தற்போதுள்ள காலநிலை முடிவடைந்துள்ளதால் ஒக்தோபர் மாதத்திலிருந்து மீண்டும் சமுத்திரத்தில் மீன்கள் வழமையான நிலைக்கு வரலாமெனவும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு அமைய எதிர்காலத்தில் மீன்களின் விலை குறைய வாய்ப்புண்டு எனவும் அவர் தெரிவித்தார். மேலும் சட்ட விரோத தொழில்முறை மற்றும் வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கையை நிறுத்துவதற்கு தற்போது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக கடற்படை மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

மீன் ஏற்றுமதியின்போது ஏற்படும் பிரச்சனைகளை மிக விரைவில் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

நன்னீர் மீன் வளர்ப்பில் முகங் கொடுத்துள்ள பிரச்சனைகள் தொடர்பாக நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டறிந்த அமைச்சர் அதற்கு விரைவில் தீரவு பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.   

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கஇ கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்தஇ நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி அசோக்கா ஆகியோர்கள்  அடங்கலாக அதிகாரிகள் பலரும் மற்றும் கடற்றொழில் தொடர்புடைய பொதுமக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபத்திய செய்திகள்

Youtube