1976ஆம் ஆண்டின் ஒப்பந்தத்துக்கு அமைய கச்சதீவின் உரிமை எமக்கு கிடைத்த போதிலும் அதன் 80% மான மீன்களை அறுவடை செய்யக்கூடிய கடற் பரப்பை நாம் இழந்துள்ளோம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
சமிபத்தில் தமிழ்நாடு மீனவ மாநாட்டில் கச்சதீவை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தமில்நாட்டின் முதல்வர் திரு எம்.கே ஸ்டார்லிங் அவர்களினால் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கருத்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்இ இந்தியாவில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் கச்சதீவை மீளப் பெறுவது பற்றி பேசுவது பொதுவான விடயமாகி விட்டது.
1974ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, இந்நாட்டின் மீனவர்களுக்கு இந்தியக் கடல் எல்லையும், இந்திய மீனவர்களுக்கு இந்நாட்டு கடல் எல்லையும் மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாய்ப்பினை வழங்கியிருந்தது. இதன்மூலம் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 06 பெரிய மீன்பிடிப் படகுகள் இந்திய பெருங் கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டன. ஆனால் 1976ஆம் ஆண்டின் ஒப்பந்தம் திருத்தப்பட்டதன் மூலம் இரு நாட்டு மீனவர்களும் இந்த வாய்ப்பினை இழந்தனர். இந்த ஒப்பந்தத்தால் கச்சதீவூ கடற் பரப்பிலிருந்து இந்தியா விலகியதுடன் இந்திய மீனவர்களின் வலை காய வைப்பத்ற்கும்இ கச்சதீவூ திருவிழாவில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 1976இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தால் கச்சதீவு எமக்கு சொந்தமானாலும் கச்சதீவைவிட 80 மடங்கு மீன் வளம் கொண்ட கடற் பகுதியை நம் மீனவர்கள் இழந்துள்ளனர்.
இந்திய மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடி செயற்பாட்டினால் வடக்கு மீனவர்களுக்கு அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகின்றது. ஆனால் எமது நாட்டு இராணுவம் மற்றும் கடற் படையும் இந்திய மீனவர்களுக்குப் பல பிரச்சனைகள ஏற்படுத்துவதாக இந்தியாவில் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இச்செய்திகள் பொய்யானவை என்பதாக நான் பல சந்தர்ப்பங்களில் இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ் நாட்டு அரசுக்கும் வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் இவ்விடயத்தை சுட்டிக் காட்டினேன். சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களை மட்டும் இந்நாட்டு இராணுவத்தால் கைது செய்யப்படுவார்கள் என்பதை வடக்கில் உள்ள திராவிட அரசியல்வாதிகளினால் இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ் நாட்டு அரசுக்கும் தெரிவிக்க வேண்டும். கச்சதீவு பிரச்சனை இந்திய தேர்தல் காலத்தில் மட்டும் தலைதூக்கும் தலைப்பு எனவும் இந்நாட்டு தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள அரசியல்வாதிகளைச் சந்தித்து அவர்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும் எனவூம் அமைச்சரர் மேலும் தெரிவித்தார்.