en banner

DSC 0825 1சிலாபம் களப்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் எடுத்துரைத்தனர்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (22.05.2023) நடைபெற்ற விஷேட சந்திப்பின்போது கருத்து தெரிவித்த தொழிலாளர்கள் களப்பு பகுதியில்  மணல் நிறைந்து காணப்படுவது, அதனால் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது, பண்ணைகளில் இறால் வளர்ப்பு செய்வோர் பயன்படுத்தும் நீர் மீண்டும் களப்பில் கலக்கப்படுவதால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் இவற்றால் குறித்த களப்புப் பகுதியில் மீன் மற்றும் இறால் இனப்பெருக்கம் ஏற்படுவதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக தெளிவுபடுத்தினர்.

மேலும் சிலாபம் பொது வைத்தியசாலை கழிவுப்பொருட்கள் நகர சபையின் குப்பைகூழங்கள் கலப்பில் கலக்கப்படுவதுடன் நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படவில்லை என மேலும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதன்போது அமைச்சர் நாரா மற்றும் நெக்டா நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு நாளைய தினமே உடனடியாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு தெரிவித்ததுடன் சிலாபம் நகரசபை செயலாளர், பிரதேச சபை செயலாளர், வடமேல் மாகாண மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள், கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் எதிர்வரும் சனிக்கிழமை அப்பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.


இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர்கள், நாரா, நெக்டா மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை குறித்த களப்புப் பகுதிக்கு நேரடி விஜயம் செய்து உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்கவேண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

சமீபத்திய செய்திகள்

Youtube