en banner

mini

நுகர்வோர்கள் மத்தியில் நீர்வாழின மீன் நுகர்வுக்குப் பொருத்தமான உற்பத்தியை வழங்கும் நோக்குடன் நாடு முழுவதிலுமுள்ள உள்ளக நீர்;த் தேக்கங்களில் நீரியல் கைத்தொழிலின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கொண்டு வரப்பட்ட வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் நீர்வாழின மீன் இனப்பெருக்க நிலையங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்கு 2023.04.09ஆந் திகதி கிழக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், கிழக்கு மாகாணத்தில் நீர்;வாழின இனப்பெருக்க நிலையத்தின் கேந்திரமாகக் கொண்ட இங்கினியாகல இனப்பெருக்க நிலையத்திலிருந்து பல பிரதேசங்களுக்குத் தேவையான மீன் குஞ்சுகள் பகிர்ந்தளிக்கப்படுவதுடன், இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்வதற்;கு நீர்நிலைகளுக்குத் தேவையான மீன் குஞ்சுகள் மற்றும் குடம்பிகளை இனப்பெருக்கம் செய்வதற்கும், குளங்களின் அளவை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மக்களுக்கு குறைந்த செலவில் நீர்வாழின மீன்கள்; நுகர்வூக்கு வழங்குவதே தமது நோக்கமென தெரிவித்தார்.

குறிப்பாக தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் குறைந்த செலவில் மீன் வளங்களை அறுவடை செய்வதன் மூலம் நுகரும் மக்களுக்கு போசாக்கான உணவை வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சு என்ற ரீதியில் செயற்படும் அதே சமயம் மீனவ சமூகத்தின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

இச்சந்தர்ப்பத்தில் நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.  

சமீபத்திய செய்திகள்

Youtube