சட்ட விரோத கடற்றொழில் நடவடிக்கையினால் இலங்கையில் கடற்றொழில் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிள் தலைமையில் வடக்கு மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2023.03.06ஆந் திகதி கச்சதீவில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் பின் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இந்திய மீனவர்கள் இடையூ+று விளைவிக்கும் வகையில் இந்நாட்டு கடல் எல்லைக்குள் ஊடுருவி, கடலடி இழுவை முறையைப் பயன்படுத்தி மீன் வளங்களை அழித்து வருவதன் காரணமாக அவர்கள் எதிர்பார்த்தவாறே கடலடி இழுவை முறையைப் பயன்படுத்தி மீன் வளங்களை அழித்து வரும்போது எக்காரணமுமின்றி அவர்கள் எதிர்பார்த்த கடலடி இழுவைத் தொழிலை மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம் எனவும் எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குமிடையில் நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலை எவ்வாறு நடாத்துவது குறித்து தேவையான ஆலோசனைகள் கிடைக்கப்பெறுமெனவும், இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், இந்திய சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையினால் தாக்குதல்களை எதிர்நோக்கும் வட மாகாண மீனவர்கள் பெரும் அநீதிக்கு ஆளாகியுள்ளனர் எனவும், தான் இந்திய அரசுடன் நல்லுறவைப் பேணி இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று இந்திய அரசு சார்பில் கலந்து கொண்ட மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான இக்கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது எனவும், இது சம்பந்தமாக எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் அதே வேளையில, சட்ட விரோத நடவடிக்கையையும் நிறுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது இந்திய அரசின் சார்பில் பாரதிய மக்கள் கட்சியின் தமிழ் நாட்டு பிராந்திய மீன்பிடி நடவடிக்கை தலைவர் திரு பூசாமி, பாரதிய மக்கள் கட்சியின் தலைவர் மீன்பிடி நடவடிக்கை தலைவர் திரு ஜீ. மனோகரன் மற்றும் இலங்கை வட மாகாண மீனவ சஙூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.