நாட்டில் மேற்கொள்ளப்படும் நீர்வாழின செய்கை செயற்றிட்டத்துக்கு ஏற்ற காணிகளை விஞ்ஞான ரீதியில் இனம் கண்டு அச்செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் தேவையற்ற தாமதங்களைத் தடுத்து மக்களிடையே நீர்வாழின செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் அமைந்துள்ள நீர்வாழின செய்கை அபிவிருத்தி நிறுவனத்துக்கு மேற்கொண்;ட சுற்றுப் பயணத்தின்போது அமைச்சர் இவ்வாறு கருத்;து தெரிவித்தார். கடந்த வருடத்திலும் இவ்வருடத்தின் எதிர்வரும் மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நீர்வாழின செயற்றிட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமெனவும் நக்டா நிறுவனத்தின் மூலம் செயற்படுத்தப்படும் செயற்றிட்டங்களில் ஏற்படும் தற்போதைய சிக்கல் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
முக்கியமாக மட்டக்களப்பு பிரதேசத்தில் தற்போது செயற்படுத்தப்படும் நீர்வாழின செய்கை முன்னேற்றம் பற்றியும் ஆராய்ந்து பார்த்த அமைச்சர் அப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் பயன்படுத்தி உரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார். மேலும் பங்கதெனிய, கிளிநொச்சி, புதுகுடியிருப்பு மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள இனப்பெருக்க நிலையங்களின் செயற்பாடுகளையும் முறையாக முன்னெடுப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க மற்றும் நீர்வாழின செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.