இன்று (2023.01.20) இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு எஸ் ஜயசங்கர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இந்திய பல்தின படகுகள் மூலம் இலங்கை கடற் பரப்பில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் மற்றும் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
இங்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இப்பிரச்சனை இலங்கையில் மீனவர்களுக்கு இதுபோன்று சமுத்திர சூழலுக்கு பாரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் இதனை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இது சம்பந்தமாக தான் கடந்த அரசில் பிரதமராக செயற்பட்ட திரு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இந்தியாவுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக இந்திய அரசின் பிரதமர் திரு நரேந்திர மூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பித்ததாகவும். இச்சந்தர்ப்பத்தில் திரு மோதி அவர்கள் இப்பிரேரணயில் கவனம் செலுத்தி தேவையான வழிமுறைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். அத்துடன் இப்பிரேரணையை செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை உடனடியாக எடுக்குமாறு அமைச்சரினால் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். இங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தபோது இது சம்பந்தமாக இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட மாகாண அரசுக்களுடன் கலந்துரையாடி தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தற்போது இலங்கையின் சூழல் அமைப்புகள் மற்றும் மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமது அமைச்சின் அதிகாரிகளுக்கும், அரசின் சட்டமா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் முடிந்தளவு உடனடியாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென குறிப்பிட்டார்
இச்சந்தர்ப்பத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (தொழில்நுட்பம்) திரு தம்மிக்க ரணதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.