கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சு நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் மீனவ மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நிறுவப்பட்ட மீனவ மகா சம்மேளனம் கடந்த காலத்தில் செயற்படாத நிலையில் இருந்ததுடன், தற்போதைய கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றதுடன் தேசிய மீனவர் மகா சம்மேளனத்துக்குப் புதிய உயிரோட்டத்தை ஏற்படுத்த அதற்கு பிரதான செயலாளர் நாயகமாக அமைச்சின் ஊடக செயலாளர் திரு. நெல்சன் எதிரிசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டார். நாடு முழுவதிலும் பரந்திருக்கும் கிராமிய சங்கங்களை ஒன்றிணைத்து அவர்களின் பிரச்சனைகளை இனம் கண்டு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
அமைச்சரின் ஆலோசகராக செயற்பட்டபோது, தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் புதிய அலுவலர் குழு கிராமிய மீனவ அமைப்புகளின் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு பல்வேறு வேலைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன் ஒரு கட்டமாக கொழும்பில் 2020.02.20ஆந் திகதி கொழும்பு முகத்துவார பிரதேசத்தில் சுயதொழில் ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆலோசனை வழங்கும் வேலைத் திட்டம் ஒன்று கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கொழும்பு நகர அபிவிருத்தி செயற்றிட்டத்தின் காரணமாக முகத்துவார பிரதேசத்தில் மீனவ மக்களின் கடற்றொழில் கைத்தொழிலுக்கு கடந்த காலங்களில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தப் பிரதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்தபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் அப்பகுதி கடற்றொழிலாளர்களினால் சுட்டிக் காட்டப்பட்டது. அத்துடன் இது சம்பந்தமாக கவனம் செலுத்திய அமைச்சர் கொழும்பு நகர அபிவிருத்தி அலுவலர்களுடன் கலந்துரையாடி பாதிப்புக்குட்பட்ட மீனவ மக்களுக்கு உதவி வழங்குமாறு கோரப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அமைப்புக்கு ரூபா எழுபது இலட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகையான எழுபது இலட்சத்தைப் பயன்படுத்தி அமைப்புகளின் அங்கத்தவர்களுக்கிடையில் இந்த கடன் திட்டத்தை ஆரம்பித்து மீனவ குடும்பங்களின் பொருளாhர நிலையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.
இந்த பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தபோது சங்கத்தின் செயலாளர் நாயகம் திரு நெல்சன் எதிரிசிங்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலப் பகுதி முழுவதும் சங்கத்தின் நடவடிக்கை செயலிழந்து காணப்பட்டதாகவும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த பொறுப்புகளை எனக்கு வழங்கியவுடன், அவரின் ஆலேசனையின் பேரில் மீனவ மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு பல்வேறு வேலைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கு அமைச்சரின் தலையீட்டினால் முகத்துவார மீனவ அமைப்புகளுக்கு பெற்றுக் கொடுத்த இந்த எழுபது இலட்சம் ரூபாவும் பயன்படுத்தி அதன் அங்கத்தவர்களுக்கு சுயதொழில் வேலைத் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதி வளம் மற்றும் ஆலோசனை வழங்கி இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதே இதன் நோக்கமாகும் எனவும் இதன் பயனைக் கொண்டு கடற்றொழிலாளர்கள் தமது சுயசக்தியூடன் எழுந்து நிற்பதற்கு எடுக்கக் கூடியதாக இருக்கும் எனவூம் கூறினார்.
இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க அவர்கள் தற்போது கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எந்நேரமும் மீனவ மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சினால் எடுக்கக்கூடிய வழிமுறைகள் சம்பந்தமாக கவனம் செலுத்துவதாகவும், மீனவ பெண்கள் மிகவூம் தைரியமானவர்களாக இருப்பதுடன் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக வலுவூ+ட்டுவதற்கு முறையான வழிகாட்டல் மற்றும் நிதி வளம் இல்லை என்பதாகவும், இதற்கு பங்களிப்பாக இன்று இந்த சுயதொழில் ஆரம்பிப்பது சம்பந்தமாக அறிவூ+ட்டும் வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவூம் தெரிவித்தார்.
இந்த வேலைத் திட்டத்துக்கு வளப் பங்களிப்பாக சேர்வுப் பொருட்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை விற்பனை சபையின் தலைவி திருமதி குமுதினி குணசேகர அவர்களுக்கும் அமைச்சர் கூறியபோது கடற்றொழில் துறைக்குள் பாரிய சுயதொழில்களில் பலவற்றை ஆரமப்பிக்க முடியும் எனவும், தமது அமைச்சுக்குள் சேவையாற்றும் காலப் பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள பெண்களை இணைத்து பல்வேறு சுயதொழில் செயற்படுத்த முடியுமெனவும், இந்த உற்பத்திளை விற்பனை செய்வதற்குத் தேவையான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் இந்த சுயதொழிலை ஆரம்பிப்பதற்கும் பயிற்சிப் பட்டறை பங்களிப்பு செய்வதற்கு தாம் அனைவரும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு தான் பிரநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் பங்களிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினார்.
இந்த பயிற்சிப் பட்டறையில் தலைமைத்துவம் மற்றும் தலைமத்துவ பண்புகள் பற்றிய சொற்பொழிவை கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் திரு கபில குணரத்ண அவர்களும், பெண்கள் சுயதொழிலுக்கு முன்வருவது சம்பந்தமாக சேர்வுப் பொருட்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை விற்பனை சபையின் தலைவி திருமதி குமுதினி குணசேகர அவர்களினாலும், மீனவ நிதி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது சம்பந்தமான சொற்பொழிவை ஓய்வு பெற்ற கூட்டுறவு பிரசோதகரான திருமதி லீலா கனேகொட அவர்களினாலும் நிகழ்த்தப்பட்டது.