en banner

WhatsApp Image 2025 08 13 at 20.54.05நிலைபேறான மீன்பிடித் தொழிலுக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், உலக வர்த்தக அமைப்பின் (WTO) மீன்பிடி மானிய உடன்படிக்கையில் இலங்கை அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைந்தது.

இதன்படி, இலங்கையின் உலக வர்த்தக அமைப்பின் தூதுவர் ஆர். ஜி. எஸ். விஜேசேகர, இதற்கான அங்கீகார பத்திரத்தை அமைப்பின் பணிப்பாளர் நாயகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பல வருடங்களாக விவாதிக்கப்பட்டு வந்த இந்த உடன்படிக்கை மூலம், சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு (IUU) வழங்கப்படும் மானியங்கள் மற்றும் அதிகப்படியான மீன்பிடி இருப்புக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை தடைசெய்யப்படும்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த, மேலதிக செயலாளர் (மீன்வள வள முகாமைத்துவம்) தம்மிக ரணதுங்க, "இந்த உடன்படிக்கை இலங்கையின் மீன்பிடித் துறைக்கு பல விசேட நன்மைகளைத் தரும். நிலைபேறான மீன்பிடித் தொழிலை முன்னெடுக்கும் நாடாக சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயர் மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். இது நமது மீன் உற்பத்திப் பொருட்களுக்கு அதிக மதிப்புள்ள ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், உலக வர்த்தக அமைப்பின் விசேட மீன்பிடி நிதியத்தின் ஊடாக நமது மீனவ சமூகத்தின் திறன்களை மேம்படுத்தவும், தொழில்நுட்ப உதவிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைக்கும்," என தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் 106 நாடுகள் ஏற்கனவே இந்த உடன்படிக்கையில் இணைந்துள்ளன. இது உலகளாவிய நிலைபேறான மீன்பிடித் தொழிலுக்கான இலங்கையின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.


ලෝකයේ රටවල් 106ක් මේ වන විට මෙම ගිවිසුම සඳහා එක් වී ඇති අතර, එය ගෝලීය වශයෙන් තිරසාර ධීවර කර්මාන්තයක් සඳහා ශ්‍රී ලංකාවේ දායකත්වය සහ කැපවීම ප්‍රදර්ශනය කරයි.

சமீபத்திய செய்திகள்

Youtube