கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள அனைத்து நிறுவனங்களினதும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் 2025.07.28 ஆம் திகதி இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) கேட்போர் கூடத்தில் இப்பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில், திரு. ஓமால் களுஆராச்சி (ஆலோசகர் / முகாமைத்துவ உத்திகள் / இடர் செயற்பாட்டு நிபுணர்) அவர்களால், அதிகாரிகளுக்கு அவர்களது துறைசார் விடயங்களுக்கு அமைவாக நிறுவன ரீதியான இடர் முகாமைத்துவம் தொடர்பில் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டன.









