en banner

DSC 0850

இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான எகிப்து தூதுவர் மாகட் மொஷ்லே அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று(21.03.2023) இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

இதன்போது, கடற்றொழிலாளர்களுக்கும் கடலுணவு உற்பத்தியாளர்களுக்கும் உதவுவதற்கு தாம் விருப்பமாக இருப்பதாகத் தெரிவித்த எகிப்து தூதுவர், தமது நாட்டின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்ததுடன் விரைவில் வட மாகாணத்திற்கு தான் வருகைதர எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

எகிப்து தூதுவரின்  வடக்கிற்கான விஜயத்தினை ஆர்வமுடன் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார்ந்து மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை எடுத்துரைத்ததுடன், வெளி நாடுகளின் அல்லது முதலீட்டாளர்களின்  நிதியுதவி கிடைக்குமானால் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CSC 0711

 

சமீபத்திய செய்திகள்

Youtube