en banner

mini

வடமாராச்சி தாளையடி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு உவர்நீர் குடிநீர் செயற்றிட்டத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டதுடன், இந்த செயற்றிட்டத்தை உடனடியாக மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசனைகளை அது தொடர்பான அதிகாரிகளுக்கு வழங்கினார். 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் பிரான்ஸ் நாட்டுக்குரிய சுவிஸ் அமைப்பின் செயற்றிட்டமான இந்த செயற்றிட்டத்தின் நிர்மாண பணிகளை 2023.03.19ஆந் திகதி அவதானித்த அமைச்சர் அங்கு பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். ரூபா 14,500 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த செயற்றிட்டத்தின் ஊடாக நாளொன்றுக்கு  24,000,000 (இரண்டு கோடியே நாற்பது இலட்சம்) லிற்றர் வரையான குடிநீர் உற்பத்தி செய்யப்படுவதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் கிராமங்களுக்கு இந்த குடிநீர் பகிர்ந்தளிப்பதற்குத் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் இந்த வருட இறுதிக்குள் நிறைவூ செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், முதற் கட்டமாக மீசாலை வரையான கிராமங்களுக்கு குடிநீர் பகிர்ந்தளிப்பதற்குத் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தாளையடி பிரதேசத்தின் வடமாராச்சி கிழக்கு கிழக்குப் பிரதேச மீனவ கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு ரூபா 58,00,000 (ஐம்பத்தெட்டு இலட்சம்) செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை ஊடாக நாளொன்றுக்கு 5,000 கி.கி ஐஸ் கட்டி உற்பத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தற்போது மின்சார இணைப்பு வழங்குவதற்குத் தேவையான சூரிய சக்தி தொகுதி தாளையடி சார்ந்த பிரதேசத்தில் பொருத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.  

சமீபத்திய செய்திகள்

Youtube