இலங்கையில் இறால் செய்கை கடந்த காலங்களில் எழுந்த பல பிரச்சனைகள் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாலஇ இக்காரணங்களுக்கான தீர்வினைக் கண்டறிந்து 6 மாதங்களுக்குள் இச்செய்கையை தற்போதுள்ள நிலைக்கு அப்பால் அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்க வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2024.04.26ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இறால் செய்கையாளர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் உட்பட நக்டா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் மத்தியில் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் தேசிய இறால் செய்கையில் வைரஸ் நோய் தொற்றியதாலும், பண்ணையாளர்களின் தவறான செய்கை முறைகள் காரணமாகவும் கடந்த ஆண்டைவிட இம்முறை அறுவடை குறைந்துள்ளதாகவும், இதற்குத் தேவையான பதிலைக் கண்டறிந்து நாரா மற்றும் நக்டா நிறுவனங்கள் இதற்குத் தேவையான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு மிகத் துரிதமாக மீட்டெடுத்து இறால் செய்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து இந்நாட்டின் அந்நிய செலாவணியைக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக் காடடினார்.
மேலும், இறால் இனப்பெருக்க நியைங்களின் உரிமையாளர்கள் மற்றும் செய்கையாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த அமைச்சர், அக்கருத்துக்களுக்கு செவிசாய்த்து அவர்களுக்குத் தேவையான கடன் தொகை (ஜனாதிபதி அவர்களினால் முன்மொழியப்பட்ட S.M.E சிறு மற்றும் நடுத்தர செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டம்) அடங்கலாக ஏனைய உதவிகளும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இங்கு இறால் செய்கையாளர்கள் மத்தியில் மேலும் உரையாற்றி அமைச்சர், இறால் செய்கையால் பெருமளவு நட்டம் ஏற்படுவதும் இதற்கக் காரணம் எனவும், இச்செய்கையை மேற்கொள்ளும்போது இது தொடர்பான ஆலோசனை அதிகாரிகளிடமிருந்து இறால் பண்ணையாளர்கள் பெற்றுக் கொள்ளாமையும் இதற்கக் காரணம் எனவும் தெரிவித்தார். எந்த ஆலோசனையின்றி இறால் செய்கை மேற்கொண்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களை முறையாக அகற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இச்சந்தர்ப்பத்தில்; கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி சோமரத்னஇ கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த, நக்டா நிறுவனத்தின் தலைவர் திரு பீ. விஜேரத்ன, நக்டா நிறுவனத்தின் ; பணிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி அசோக்கா மற்றும் இறால் பண்ணையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கலாக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.