PHOTO 2024 10 30 13 57 04 10

இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் மீன்பிடி நடவடிக்கை தொடர்பாக ஒருங்கிணைந்த செயற்பாட்டு குழுவின் 6வது அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் 2024 ஒக்தோபர் 29ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு பிரதேசம் சார்ந்த இலங்கை கடற் பிரதேசத்துக்குள் இந்திய மீன்பிடிப் படகின் மூலம் மேற்கொள்ளப்படும் தடை செய்யப்பட்ட மீன் செயற்பாட்டினை தடுப்பதே இக்குழு அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். 2022 மார்ச் மாத இறுதிப் பகுதியில் கூடிய இக்குழு ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் கூடியது.

வடக்கு கிழக்கு பிரதேசம் சார்ந்த இலங்கை கடற் பரப்புக்குள் இந்திய படகுகள் நுழைவதைத் தடுப்பதற்கு இரு நாடுகளுக்கான சட்டத்தை செயற்பத்தும் அதிகாரிகளின் ஒருங்கிணந்த கூட்டு ரோந்து நடவடிக்கை, இரு நாடுகளிலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைக்குப் பின்னர், அந்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்தல், இரு நாட்டு கரையோர பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படும் அவசர அழைப்பு பொறிமுறையை வலுப்படுத்தல், இலங்கை கடற் பரப்பில் இந்திய மீனவர்கள் தொடர்பாக நடைபெற்றுவரும் பரிசோதனைகளின் தற்போதைய நிலை குறித்து  ஆராய்ந்து பார்த்தல், மற்றும் இருநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களினால் மீன்பிடி துறை சார்ந்த ஒருங்கிணைந்த கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது குறித்து விசேட அவதானம் செலுத்தும்.

இந்திய மீன்பிடிப் படகுகளினால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் இயந்திரத்தின் மூலம் கடலயில் இழுத்துச் செயல்லடும் வலையைப் பயன்படுத்துவதன் (Bottom trawling)  காரணமாக சமுத்திர வளங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மற்றும் அதனைத் தடுப்பதற்கு கடைப்பிடிக்கப்படும் முக்கியத்துவம் பற்றியும் இலங்கை அரசின் பிரதிநிதிகளினால் இங்கு வலியுறுத்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக, இலங்கை பன்னாட் படகுகளுக்கு அரபிக் கடலுக்குப் பயணிப்பதற்கும் அங்கிருந்து திரும்பி வருவதற்கும் வசதி வழங்குவதற்கு இந்திய கடற் பரப்பின் ஊடாக பிரவேச வழியை ஏற்படுத்தித் தருமாறு கோரப்பட்ட கோரிக்கைக்குப் பதிலழிக்குமாறும் இலங்கைப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

மீன்பிடி நடவடிக்கை தொடர்பான ஒருங்கிணைந்த குழுவின் கூட்டம் சட்டப்படி நடாத்துவதற்கும், ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பான முன்னேற்றத்தைக் கண்காணிக்கவூம் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

இலங்கை பிரதிநிதிகள் குழுவில் விவசாய, காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சன் செயலாளர் எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க, கடற்றொழில் நடவடிக்கை மேலதிக செயலாளர் தம்மிக்க ரணதுங்க, கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நிலுக்க கதுருகமுவ, மேலதிக சொலிஸ்டர் நாயகம் விதும் த அப்ரூஇ கடற்படை கொமண்டோ ஏ.டீ. வீரசிங்க, ஆகியோர்கள் உள்ளிட்ட பலர் இக்குழுவில் உள்ளடங்கியிருந்தனர். இந்திய மீன்பிடித் துறை செயலாளர் கலாநிதி அபிலக்ஸ் லிக்ஹி, இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா, இந்திய வெளிவிகார அமைச்சின் மேலதிக செயலாளர் சிறி புனிட் அக்ரவால், இந்திய மீன்பிடி நடவடிக்கை இணைச் செயலாளர் நீட்டு பிரசாத் ஆகியோர்கள் அடங்கலாக இந்திய அரசின் சார்பில் இக்கலந்துரையடலில் கலந்து கொண்டனர்.     

WhatsApp Image 2024 10 30 at 13.57.09

PHOTO 2024 10 30 13 57 04 1

PHOTO 2024 10 30 13 57 04

PHOTO 2024 10 30 13 57 04 2

PHOTO 2024 10 30 13 57 04 3

PHOTO 2024 10 30 13 57 04 4

PHOTO 2024 10 30 13 57 04 5

PHOTO 2024 10 30 13 57 04 6

PHOTO 2024 10 30 13 57 04 7

PHOTO 2024 10 30 13 57 04 8

PHOTO 2024 10 30 13 57 04 9

Youtube