en banner

WhatsApp Image 2024 01 16 at 1.57.39 PM

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள் பற்றிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 2024.01.14ஆந் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்துக்குள், இந்திய மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கை காரணமாக ஏற்படும் தாக்கம், காற்றலை சக்தி செயற்றிட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் காரணமாக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கை பற்றியும் இங்கு அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது. 

மேலும் கடலட்டை செய்கை பண்ணைகள் மற்றும் இறால் செய்கை பண்ணைகளினால் மீனவர்களுக்கு ஏற்படும் இயலாமையின் இடையூ+றுகள் குறித்தும் ஆராய்ந்து பார்த்து மானியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் மன்னார் மாவட்டத்தில் தோன்றியுள்ள சட்ட விரோதமான நடவடிக்கையான டைனமையிற், சுருக்கு வலை, சுழியோடல் போன்ற விடயங்களை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடற் படைக்கு அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் மீனவ சங்கத்தினால் கடற் படைக்கு இந்த சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையை நிறுத்துவதற்குத் தேவையான உதவி வழங்குவது அவசியமாக இருப்பதாகவூம் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

மேலும் இந்திய மீனவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் இந்திய மீன்பிடி படகுகளால் நிகழும் மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்திய கடலடி இழுவை முறை பற்றியும் இந்திய அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடுவதாகவூம் தெரிவித்தார்.      

சமீபத்திய செய்திகள்

Youtube