en banner

WhatsApp Image 2024 01 01 at 12.13.27

2024.01.01ஆந் திகதி கடற்றொழில் அமைச்சின் புதிய வருடத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கும் வைபவத்தில் பிரதான அதிதியாகக் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். 

வரவு செலவு திட்டத்தின் மூலம் 2024ஆம் ஆண்டுக்கு ரூபா 8,400 மில்லியன் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் கடற்றொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டு மீனவர்களின் அபிவிருத்திக்காக பல பெரும் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளதாகவும், அமைச்சின் புதிய செயலாளர் அடங்கலாக சகல பணிக் குழுவினரும் இதற்கு அர்ப்பணிப்புடனும், திறமையுடனும் தங்களது சேவையை ஆற்றுவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடங்களில் தமக்கு ஆதரவை வழங்கிய இந்த அமைச்சின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான திரு சனத் நிஸாந்த,  திரு கஞ்சன விஜேசேகர,  திரு வீ சானக்க மற்றும் தற்போதைய இராஜாங்க அமைச்சரான திரு பியல் நிஸாந்த த சில்வா ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோர்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் வைக்க வேண்டுமெனவும், மேலும்  04 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்ற திருமதி இந்து ரத்னாயக்க அவர்கள் அந்த அமைச்சுக்கு பெரும் ஆதரவை வழங்கியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த வருடத்தில் அனைத்து ஊழியர்களும் தங்களது கடமைகளை ஒழுங்காகச் செய்வதற்கு வலிமையும் தைரியமும் பெறுவார்கள் என நம்புவதாகவும், அதிமேதகு ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்க அவர்களின் நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்துக்கு கடற்றொழில் அமைச்சு அதிகபட்ச ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஸாந்த மற்றும் கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளர் செல்வி கே.என். குமாரி சோமரத்ன, கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த மற்றும் கடற்றொழில் அமைச்சுக்குரிய அனைத்து நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உட்பட பணிக் குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.       

WhatsApp Image 2024 01 01 at 12.13.29

 

சமீபத்திய செய்திகள்

Youtube