எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு பிரதேசத்தின் ககருவாடு பதனிடும் தொழிலில் ஈடுபடும் மீனவ குழுவினர் 2023.09.04ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து, தமது தொழிலுக்கு இக்கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்தனர்.
இக்குழுவில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு நிமல் லன்சா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இங்கு நீர்கொழும்பு கடனீரேரி சார்ந்த பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு, நீர்கொழும்பு கரையோரப் பகுதியைப் பயன்படுத்தி கருவாடு பதனிடும் தொழில் செய்து வந்த வேளையில் கப்பல் சேதமுற்று தமது தொழிலை இழந்ததாகவும் கரையோரப் பகுதியில் கருவாடு உலர்த்தும் நடவடிக்கையை நிறுத்தியதால்இ தமது பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்இ இது குறித்து ஆய்வு செய்து எமது தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு ஏற்பட்ட சேதத்தினால் இந்நாட்டின் மீன்பிடித் தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்பதை குறிப்பிட்டு சொல்லத் தேவையில்லைஇ,அமைச்சர் என்ற முறையில் தானும் எமது அதிகாரிகளும் இணைந்து மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு பல கட்டங்களாக இழப்பீடு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கருவாடு பதனிடும் தொழில் சார்ந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பின் அது பற்றி ஆராய்ந்து பார்த்து விரைவில் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.