கடந்த காலப் பகுதியில் காலநிலை மாற்றம் மற்றும் பருவ பெயர்ச்சிக் காற்று சீராக இல்லாமையாலும், தொடர் மழைக் காலம் காரணமாக பெருமளவு உயரந்திருந்த மீன்களின் விலை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாக கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு டீ.பீ. உபுள் 2023.08.16ஆந் திகதி இன்று கடற்றொழில் அமைச்சில் தெரிவித்தார்.
இதன்போது இவ்விடயத்தை முன்வைத்த தலைவர், தற்போது லின்னா மீனின் விலை 400 தொடக்கம் 500 வரையாகவும், கெலவல்ல ரூபா 1இ100 வாகவும், கணவாய் ரூபா 400 வுக்கும் 50வுக்கும் இடைப்பட்டிருப்பதாகவும், பலயா ரூபா 700 வாகவும் விலை குறைந்துள்ளதாகவும் தெரித்தார்.
கடந்த காலங்களில் கெலவல்ல மீனின் விலை ரூபா 2,200வவுக்கும் கூடுதலாக இருந்ததாகவும், ஏனைய சகல மீன்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் நுகர்வோர்கள் கடும் அதிருப்தி அடைந்திருந்ததுடன் தற்போது பருவ காலம் முடிவடைந்துள்ளதால் மீனின் விலையும் குறைந்துள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார். இதன்மூலம் நுகர்வோர் பெருமளவு நிவாரணம் பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க அடங்கலாக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.