இந்நாட்டு மீனவர்களினால் சமுத்திரத்தில் மேற்கொள்ளப்படும் பொக்கண வலை மற்றும் வெளிச்சக் கவர்ச்சி போன்ற சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையை முழுமையாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.02.21ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்
மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் அதிகரித்துள்ளமையால் ஐஸின் விலையையூம் உயர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக மீனின் விலையூம் உயரக்கூடும் என இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஐஸ் தொழிற்சாலை உரிமையாளர்களினால் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் எதிர்வரும் சில தினங்களுக்குள் கிழக்கு மாகாணத்துக்கு சுற்றுப் பயணம் செல்வதற்குத் தான் எதிர்பார்ப்பதாகவும் அங்கு அம்மாகாணத்துக்குள் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நீர்வாழின செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களுக்கு சுற்றுப் பயணம் செல்வதற்குத் தான் எதிர்பார்பார்துள்ளதாகவும், நீர்வாழின செய்கை முன்னெடுத்து செல்வதற்கு உள்ள தடைகளை நீக்குவதற்குத் தேவையான தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவூள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க அடங்கலாக அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.