en banner

DSC 0190

தென் கடலில் இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான கடற்றொழில் நடவடிக்கையை முற்றாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.01.24ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் பெருமளவு நடைபெற்றதாகவும் தான் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றபின் இருநாடுகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பிரதிபலானக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. தற்போது அந்த நிலைமை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள அதிக அளவிலான இந்திய கடற்றொழில் படகுகள் எமது மீனவர்களுக்கு வழங்கி கடலில் விடப்பட்டு மீன் அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். எமது மீனவர்கள் பயன்படுத்தும் படகு  சிறிய அளவுடையதாக இருப்பதன் காரணமாக இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு உட்படுவதாகவும், அதனைத் தவிர்ப்பதற்கு  கையகப்படுத்தப்பட்டுள்ள படகுகளைப் புயன்படுத்த முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் கையகப்படுத்தப்பட்டுள்ள படகுகளில் ஒர குறிப்பிட்ட தொகையை கடற் படையினருக்கு வழங்குவதன் மூலம் ரோந்து பணிகளை அதிகரிக்க எதிர்பார்ப்பதாவும், இந்த வருட இறுதிக்குள் இந்திய படகுகளின் அத்துமீறல்களை முழுமையாக நிறுத்துவதற்கு எதிர்பார்ப்பதாவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க,  கடற்றொழில் திணைக்கனத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த, பணிப்பாளர் நாயகம் திரு தம்மிக்க ரணவக்க மற்றும் கடற் படையினரின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.  

DSC 0192

 

சமீபத்திய செய்திகள்

Youtube