கடந்த தினம் தெற்கே கடற்றொழில் துறைமுகங்களில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து பாரப்பதற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த விஜயத்தின் போது தென் மாகாண கடற்றொழில் துறைமுகங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி அபிவிருத்தி செய்வதற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா எனக் கண்டறிவதற்கு 2023.01.09ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினார்
இங்கு தென் மாகாணத்தில் உள்ள கிரிந்த, ஹம்பாந்தோட்டை, குடாவல்ல, கந்தர, காலி, மிரிஸ்ஸ, பேருவளை, மருதானை, பெரலிய தொடந்துவ, பாணந்துறை ஆகிய துறைமுகங்கள் மற்றும் படகுத்துறைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பல குறைபாடுகள் குறித்து இந்த ஆய்வு விஜயத்தின் போது அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார். குறிப்பாக கிரிந்த துறைமுகத்தில் மணல் நிறைவதனால் படகுகள் துறைமுகத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், இந்த மணலை அகற்றுவது சம்பந்தமாக கலந்துறையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்னார். அதன் தாமதம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவிய அமைச்சர் இந்த மணலை இலங்கையில் நிர்மாண பணிகளுக்கு பயன்படுத்த முடியாது என்பதால், அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் இந்த துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு மேலும் ஆலோசனை வழங்கினார்.
மேலும் துறைமுகங்களின் துhய்மை மற்றும் உள்ளக வீதிகளைப் புனரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்திய அமைச்சர், கலங்கரை விளக்கு பொருத்தல் மற்றும் சகல துறைமுகங்களுக்கும் சோலர் தொகுதிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த படகுகளை அகற்றவூம்இ அதற்கு யாதேனும் தடைகள் இருப்பின், அதற்கு சட்ட அலுவலரிடம் தேவையான ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க மற்றும் கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தன் முகாமைத்துவ பணிப்பாளர் திரு சத்தியானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.