இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி (Dr. Satyanjal Pandey) ஆகியோர்களுக்கிடையிலான கலந்துரையாடல் 2023.09.23ஆந் திகதி (இன்று) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யபஞ்சல பிலண்ட்டி அவர்கள் இந்தியா இலங்கைக்கிடையில் நீண்ட காலமாக நட்புறவூ இருந்து வந்துள்ளதாகவும், இந்திய அரசு இலங்கைக்கு பல சந்தர்ப்பங்களில் உதவி செய்து வந்துள்ளதாகக் கூறினார். அத்துடன் இந்திய கடற்றொழில் விஞ்ஞானிகள் குழுவினால் இலங்கை கடற்றொழில் துறையின் அபிவிருத்;குத் தேவையான ஆதரவை வழங்கும் என அவர் தெரிவித்தார். குறிப்பாக கடலட்டை, நண்டு, இறால் மற்றும் அலங்கார மீன் செய்கையிடும் செயற்பாடுகளுக்கு தேவையான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அவர்களால் வழங்க முடியுமெனவும் தெரிவித்த அவர், மீன் இனப்பெருக்க நிலையங்களை அமைப்பதற்குத் தேவையான வசதிளை வழங்குவதற்கு தமது அரசு தயாராக இருப்பதாவும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக இலங்கையின் நீர்வாழின செய்கைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த சிரேஷ்ட விஞ்ஞானியான கலாநிதி லோச்சனா வீரசிங்க அவர்கள் நீர்வாழின செய்கைக்குப் பொருத்தமான இடங்களை இப்பிரதிநிதிகள் குழுவுக்கு காண்பித்து அவர்களுக்கு இதுபற்றி புரிதலை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இந்திய அரசினால் இலங்கையின் கடற்றொழில் துறையின் அபிவிருக்காக வழங்கப்படும் உதவி இரு நாட்டுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுவூ+ட்டும் எனவும்இ எதிர்காலத்தில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு இரு நாட்டு பிரதிநிதிகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இது நீண்ட கால திட்டமாக இருப்பதால், மீன்பிடித் துறையை மேம்படுத்துவதற்கும் இவ்வாறு ஏனைய துறைகளையும் மேம்படுத்துவதற்கும் இந்திய அரசின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
இதன்போது கடற்றொழில் அமைசசின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்தஇ அமைச்சரின் ஆலோசகர் கலாநிதி நவரத்ன ராஜா, நாரா நிறுவனம் மற்றும் நக்டா நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.