பல்தின படகு உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் ஆலோசனைகளை விசாரிப்பதற்கு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்கள் பல்தின படகுகளின் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கடந்த தினம் கடற்றொழில் அமைச்சில் கலந்துரையாடல் கலந்து கொண்டார்.
இங்கு படகு கண்காணிப்புத் தொகுதிகளை (VMS) நிறுவுவதன் மூலம் சகல பல்தின கடற்றொழில் படகுகளையும் கண்காணிப்பதற்கான திறன் ஏற்படுவதோடு, ஆழ்கடலில் மேற்கொள்ளப்படும் ஆட் கடத்தல், போதைப் பொருட்கள் கடத்தல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளையும் சுற்றி வளைப்பதற்கும், கட்டுப்படுத்தவும் உதவும் என சுட்டிக் காட்டப்பட்டது.
அறுவடைக்குப் பின்னர் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து மீன் அறுவடையைக் கரைக்கு கொண்டு வருவதற்கான தேவையையும் சுட்டிக் காட்டிய அமைச்சர், இதற்கு மீனவர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
இங்கு பல்தின படகு உரிமையாளர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு எடுக்கக்கூடிய தீர்வுகளை விரைவாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார்.