இந்து சமுத்திரத்தில் விற்பனை கேந்திர நிலையமாக பல நூற்றாண்டுக் கணக்கில் புகழ் பெற்ற பெயரைக் கொண்டதாக இலங்கை இயற்கை வளங்களை பரவலாக தன்னகத்தே கொண்டு பொருத்தமான வசதிகள் அனைத்தையும் கொண்ட மத்திய அளவிலான தீவைக் கொண்ட அரசாகும்.
முன்னேற்றகரமான பொருளாதார கொள்கையின் ஊடாக இலங்கை இந்திய அரைத் தீவில் நுழைவாயிலாகவும் அமைந்துள்ளது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகவும் அனுகூலமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 1.4 பில்லியனுக்கு கூடுதலான மக்களுக்கு வர்த்தக நுழைவுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறது. ஐரோப்பிய சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு பிரவேசிப்பதற்கு சீனா மற்றும் சிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பிரதிபலனாக ஏற்றுமதி கேந்திர நிலையமாக இலங்கைக்கு எதிர்காலத்தில் 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுடன் சிறந்த வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிலையான மற்றும் அமைதியான சோசலிசமான நிர்வாக முறையுடன் இலங்கை தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கு பிரதான முதலீட்டாளராக ஆக்கப்பட்டுள்ளது. மிகவும் அண்மித்த உயர் மத்திய வருமானம் பெறும் அரசாக இலங்கை இருப்பதுடன், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கிடையில் உயர் போட்டி பொருளாதாரத்துக்கு உரித்துக்குப் பொறுப்பு கூறும் இலங்கை முதலீட்டாளர்களில் பாதுகாப்பான, வர்த்தகத்துக்கு விருப்பம் தெரிவிக்கும் முதலீட்டுக்கு பின்புலம் வழங்கப்படும்.
“செரன்டிப்” மற்றும் “இந்து சமுத்திரத்தின் முத்து” என இனம் காணப்பட்ட இலங்கை சமுத்திரம், நீரியல் மற்றும் கடற்றொழில் துறையில் இருக்கும் சிறிய புதிய முதலீட்டுக்கு சந்தர்ப்பம் வழங்க முதலீட்டாளர்களுக்கு வழி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முதலீடுக்கு சாத்தியமான பகுதிகளில் சில:
கடற்றொழில் துறை
- மீற்றர் 24 – 25 வகையின் டூனா நீள்தூண்டல் தொழில்முறை கடற்றொழில் படகை அறிமுகப்படுத்துவதன் ஊடாக ஆழ் கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்கு தேசிய படகுத் தொகுதியை வலுவூட்டுதல்.
- அண்ணிய பொருளாதார வலயத்துக்குள் பிடிக்கும் மற்றும் ஆழ்கடலில் பிடிக்கும் சிங்கி இறால் போன்றவை குறைந்தளவில் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத உயர் பெறுமதி கொண்ட மீன் வளங்களை அறுவடை செய்தல்.
- இலங்கை கடல் பிராந்தியத்தில் புறப்படும் வெளிநாட்டு படகின் மூலம் அறுவடை செய்யப்படும் மீன்களை தயாரித்தல் மற்றும் மீள் ஏற்றுமதி செய்தல்.
- இறக்குமதி செய்யப்படும் தகரத்திலடைத்த மீன்களாக அல்லது வேறு விடயங்களில் மேம்படுத்தப்பட்ட மீன் உற்பத்தியாக மீன் ஏற்றுமதி செய்தல்.
- ஏற்றுமதிக்கு தேசிய ரீதியாக உற்பத்தி செய்யப்பட்ட மீன் உற்பத்தி செய்யப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் உற்பத்தியாக மேம்படுத்தல் - தற்போது அதிக மீன்கள், இறால் மற்றும் ஏனைய மீன் உற்பத்தி ஏற்றுமதி செய்வதற்கு முன் அனாவசிய பாகங்களை அகற்றி உணவுக்கு பொருத்தமானவாறு தயாரிப்பதற்கு மட்டும் மேற்கொள்ளப்படும்.
- ஐஸ் தொழிற்சாலை, குளிரூட்டி மற்றும் குளிரூட்டல் (Cold chain) நிறுவுதல் - ஐஸ் உற்பத்தி மற்றும் வழங்கல் மீன் சந்தையுடன் சம்பந்தப்படுத்தி முதலீடு மற்றும் மீனவர்கள் போன்றவர்களுக்கு அனுகூலமான விசேட பிராந்தியத்துக்கு குளிரூட்டலை ஒரு முதலீட்டாளரினால் நிறுவுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
- படகு பழுதுபார்த்தல் மற்றும் படகு துறைமுகத்தில் உயர்த்தி வெளியே கொண்டு வந்து பழுதுபார்க்கும் இடத்துக்கு கொண்டு செல்லல் உட்பட தடாக வசதிகளும் வழங்கல். இந்த நடவடிக்கைகளை இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து மேற்கொள்ள கூடியதாக உள்ளது. முதலீட்டாளர்கள் இந்த சேவையை பொறியியலாளர் பழுதுபார்ப்பதேடு சேர்த்தும் செய்யலாம்.
கடற்றொழில் செயற்றிட்டம் சம்பந்தமாக மேலதிக தகவல்கலுடன் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் குறித்த தகவல்களை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் பெற்றுக் கொள்ள முடியும்: www.fisheriesdept.gov.lk
நீர்வாழ் உயிரினச் செய்கை துறை
- நீர்வாழ் உயிரினச் செய்கை பூங்கா
- யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டத்தில் நீர்வாழ் உயிரினச் செய்கை.
- வட மாகாணத்தில் கடல் தாவரச் செய்கை (மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம்)
- புத்தளம் மாவட்டத்தில் தற்போதுள்ள இறால் செய்கை பண்ணையை நவீனமயப்படுத்தல்
- வடமேல் மாகாணத்தில் தற்போதுள்ள திருப்தியான நடைமுறைகள் அல்லாத இறால் செய்கை பண்ணைகளில் சிவப்பு திலாப்பியா அல்லது வேக்கையா செய்கையை குளங்களில் மேற்கொள்ளல்
- இலங்கையில் அலங்கார மீன் மற்றும் அலங்கார தாவரச் செய்கை
- "கப்பி" எனும் இலங்கை அலங்கார மீன் செய்கை, மாறுபட்ட மற்றும் இலகுவாக இருப்பதன் காரணமாக சர்வதேசத்தில் பிரபல்யமாகத் திகழ்கிறது
- கடலட்டை செய்கை
- இருதோடுடைய பாலூட்டிகள் செய்கை (சிப்பி மற்றும் மட்டி)
- சேற்று நண்டு (mud crab) செய்கை மற்றும் நீல நண்டு (blue-swimming crab) செய்கை
- சமுத்திர நீர்வாழ் உயிரினச் செய்கை (மோதா மீன், டூனா Grouper மற்றும் Cobia மீன்)
நீர்வாழ் உயிரினச் செய்கை செயற்றிட்டம் சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு பணிப்பாளர் (கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை), தேசிய நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.: www.fisheriesdept.gov.lk
கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கைத்தொழிலுக்கான உள்ளீடு
- கடற்றொழில் உபகரணங்கள் உற்பத்தி (கடற்றொழில் கயிறு, வலை, இரை போன்றவை)
- இறால் மற்றும் ஏனைய நீர்வாழ் உயிரின மீன் உணவு உற்பத்தி (தற்போது இத் தேவைகள் முழுமையாக இறக்குமதி மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதில் அதிகமான மூலப் பொருள்; அகற்றப்படும் மீன் பாகங்கள், மீன் உணவு மற்றும் பல்வேறு தானிய வகைகளிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்)
- ஏற்றுமதிக்காக படகு உற்பத்தி - இலங்கை கம்பனியினால் கடற்றொழில் படகுகள், பொழுதுபோக்குக்கான படகுகள், சுங்க மற்றும் கரையோர பாதுகாப்பு படைக்கு கண்காணிப்பு படகுகள், உயிர்காப்பு படகுகள் போன்றவை மாலைதீவு சீசெல்ஸ், மத்திய கிழக்கு மற்றும் ஐக்கிய ராஜதானி, பிரான்ஸ், ஒல்லாந்து மற்றும் நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளின் தேவைக்கு அமைவாக வழங்கப்படுகிறது.
ஏனைய நடவடிக்கைகள்
- மீன் உற்பத்தி உணவுச்சாலை நிறுவுதல் - நாட்டின் பிரதான நகரங்களில் மீன் உற்பத்தி உணவுச்சாலைகளில் விற்பனை முதலீட்டுக்கு சந்தர்ப்பம் நிலவுகிறது.
- மெரீனா துறைமுகம் நிறுவுதல், திமிங்கலம் கண்டுகளித்தல் மற்றும் மீன்பிடிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தல்.
- சூழல் சுற்றுலா கைத்தொழில் - இலங்கையில் காணப்படும் சூழல் சுற்றுலா வளங்களின் காரணமாக அதனைப் பயன்படுத்தல் மற்றும் சூழல் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக ஆக்குதல்.
- நவீன தொழில்நுட்பம் கொண்ட நீர்வாழ் உயிரின காட்சியகம் மற்றும் அருங்காட்சியகம் நிறுவுதல் - சமுத்திர மீன்களின் பெரிய அளவிலான பொதுமக்கள் நீர்வாழ் உயிரின காட்சியகம் இலங்கையில் இல்லை. இந்த நீர்வாழ் உயிரின அருங் காட்சியகம் நிறுவுதல் வேண்டும்.
இலங்கை முதலீட்டு சபைக்கு தேவையான வெளிநாட்டு முதலீட்டுக்கான அங்கீகாரம் : www.investsrilanka.com