Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
26 September 2026
கந்தர மீன்பிடித் துறைமுகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் ஆரம்பம்

மீனவர்களின் அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், கந்தர மீன்பிடித் துறைமுகத்தின் தேவைகளைக் கருத்திற்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஓர் அங்கமாக, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதான நிர்வாகக் கட்டடம் உள்ளிட்ட வசதிகள் நேற்று (25) முதல் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகளுக்காகத் திறந்து வைக்கப்பட்டன.

 

இதன் மூலம் கடலோரப் பாதுகாப்புப் படை, மீன்பிடித் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் ஆகிய நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அவற்றைக் கண்காணிப்பதற்கும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளையும் இத்துறைமுகத்தில் முன்னெடுப்பதற்கான இடவசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

மேலும், மீனவர்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கான எரிபொருள் நிலையம், சிறுபடகுகளை நிறுத்துவதற்கான இடம், மீன் ஏல விற்பனை மண்டபம், கேட்போர் கூடம், குடிநீர் வசதிகள் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மீனவர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அவர்களின் அன்றாடத் தொழில் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆரம்ப நிகழ்வில் இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Latest News