இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மேதகு மசூத் இமாத் (H.E. Masood Imad) மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (10) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாசவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" எனும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின்கீழ், கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள சுழியோடிகள் எதிர்கொள்ளும் தொழில்சார் அபாயங்களுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் அண்மையில் (07) கற்பிட்டியில் நடைபெற்றது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் நாட்டின் மீன்பிடித்துறை எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகள் குறித்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பாதிக்கப்பட்ட துறைகள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அண்மையில் (மார்ச் 24) சீனாவின் குவாங்சூவில் (Guangzhou) அமைந்துள்ள தென் சீன கடல் கடல்சார் ஆய்வு நிறுவனத்தில் (SCSIO) நடைபெற்ற "வெப்பமண்டல கடல்சார் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த சீன-இலங்கை கல்வி மன்றத்தில்" (China-Sri Lanka Academic Forum on Tropical Marine Environmental Changes) இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.
சமீபத்திய செய்திகள்
- இலங்கை - மாலைதீவு கடற்றொழில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது: மாலைதீவு ஜனாதிபதியின் வருகை மற்றும் கடற்றொழில் துறையின் புதிய முதலீடுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்
- கடற்றொழில் சுழியோடிகளின் தொழில்சார் அபாயங்களை உள்ளடக்கிய புதிய காப்புறுதித் திட்டம் : பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் கற்பிட்டியில் ஆரம்பம்
- தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல துறைகள் கடுமையாக
- மத்திய கிழக்கு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு விசேட கொடுப்பனவு : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இன்று அமைச்சரவையில் தீர்மானம்
- இலங்கை - சீனாவிற்கு இடையிலான கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே சீனாவில் தெரிவிப்பு





