mini douglas devananda

இந்திய மீனவர்கள் பலாத்காரமாக வடக்கு கடலில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பை கண்காணிப்பதற்காக “கடல.; காவலர்கள்” எனும் பெயரில் தன்னார்வப் படையை நிறுவுவதற்கு கடற்றொழில் அமைச்சினால் 2024.03.18ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மசோதா ஒன்றை சமர்ப்பித்தார் தெரிவித்தார்.

வட மாகாணத்தின் கடற் பரப்பில் இந்திய மீன்பிடிப் படகுகள் வருவதனால் வட பகுதி மீனவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதைத் தடுப்பதற்காக இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் வருகையைத் தடுப்பதற்கு எமது மீனவர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்ததாகவும், இவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இந்த தன்னார்வ கடற் படை செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். இந்த தொண்டர் படைக்கு இளைஞர்களைத் தெரிவு செய்யும்போது வடக்கில் உள்ள மீனவ சங்கங்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையில் இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கையின் கடற் பரப்புக்குள் பிரவேசிப்பதனால் வடக்கில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 500 இந்தியப் படகுகளுக்கு மேல் வட கடலுக்கு வந்து இந்திய மீனவர்களினால் 1000 கி.கிராக்கும் கூடுதலாக பலாத்காரமாக மீன் அறுவடை செய்வதனால், வடக்கு மீனவர்கள் ரூபா 350 மில்லியனுக்கும் அதிகமான தொகை இழப்பதாகத் தெரிவித்தார்.

வாரத்துக்கு 03 நாட்களுக்கு சமமாக 900க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் வடக்கு கடற் பரப்பில் பிரவேசிப்பதாக அமைச்சரவை மசோதாவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகள்

Youtube