mini 3

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களின் தலைமையில் பன்னாட் படகுகள் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் 2024.03.18ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கலங்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இலங்கை முதலீட்டாளர்கள் சபை, நிதி அமைச்சு, வருமான வரி திணைக்களம் ஆகிய  பிரிவுகளின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். ஏதிர்காலத்தில் எரிபொருள்களுக்கு வெட் வரி நிவாரணம் வழங்குவதற்கான பொருத்தமான வழிமுறை தயாரித்து நிதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இங்கு கருத்து தெரிவித்த பன்னாட் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் அலுவலர்கள், வெட் வரி அதிகரித்தல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். எரிபொருள் மற்றும் வெட் வரி அதிகரிப்பதற்கு முன் பன்னாட் படகுகள் கடலுக்குச் செல்வதற்கு ரூபா 25 இலட்சம் செலவிட்டதாகவும்இ தற்போது ரூபா 60 இலட்சம் வரை இந்த தொகை உயர்ந்து சென்றுள்ளதாகவூம் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேலும் அக்காலப் பகுதியில் ஒரு கிலோ டூனா மீன் 2000 ரூபாவூக்கு விற்கப்பட்டதாகவும் தற்போது அது  ரூபா 1400 வரை குறைந்திருப்பதாகவும் இதனால் மீனவர்கள மீன்பிடிக் கைத்தொழிலை கைவிடும் நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த மீன் ஏற்றுமதியாளர்கள், மாலைதீவு, இந்தியா ஆகிய நாடுகளில் டூனா மீன் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனால் தமது மீன்களுக்கு குறைந்த கோரிக்கை நிலவூவதாகவும் தெரிவித்தனர். 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மீனவர்கள் முகங் கொடுக்கும் நிலை தொடர்பாக தமக்கு மற்றும் அரசுக்கும் புரிநந்துணர்வு இருப்பதாகவும், இதற்கான தீர்வினை விரைவில் வழங்குவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாவும் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின், ஏற்றுமதி சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா சோமரத்ன மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த ஆகியோர் அடங்கலாக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.        

சமீபத்திய செய்திகள்

Youtube