mini

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு மற்றும் பாதுகாப்புக்காக இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் வடக்கு அபிவிருத்திக்காக ரூபா 4900 மில்லியனுக்கும் கூடுதலான நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும், இந்த உதவி எமது நாட்டின் அபிவிருத்திக்காக சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென கடந்த தினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த அமைச்சர், எமது நாடு பல்வேறு பொருளாதார பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்திருந்த இவ்வேளையில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் எடுத்த சரியான தீர்மானங்களினால் தற்போது நாடு அதிலிருந்து மீண்டு வருகிறது. எனவே வெளிநாடுகளுடன் நாம் பேணிவரும் சிறந்த இராஜதந்திர உறவுகளால், வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக சீன கூட்டு அரசினால் ரூபா 1,500 மில்லியன் வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளாக தெரிவித்தார். இதில் ரூபா 500 மில்லியன் வீடமைப்புக்காகவும், மேலும் ரூபா 500 மில்லியன் மக்கள் உதவிக்காகவும் மீதி ரூபா 500 மில்லியன் மீனவர்களின் வலை உபகரணங்கள் வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுமென அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக மார்ச் 22ஆந் திகதி பிரதமர்   தினேஸ் குணவர்தண அவர்கள் சீனாவுக்கு விஜயம் செய்வதற்குத் தீர்மானித்துள்ளார் எனவும், இச்சந்தர்ப்பத்தில் இந்த உதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்திய அரசினாலும் வடக்கின் அபிவிருத்திக்காக ரூபா 3,000 மில்லியன் வழங்குவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த உதவி சமுத்திர பரிசோதனை நடவடிக்கை மற்றும் பெரிய அளவிலான கூண்டுகளில் மீன் வளர்ப்புக்கு தருவதாகவும், ஜப்பான் அரசினாலும் வடக்கின் அபிவிருத்திக்காக ரூபா 415 மில்லியன் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உதவியை நாட்டின் நன்மைக்கும், மக்களுக்கும் உரிய முறையில் பயன்படுத்த வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

Youtube