WhatsApp Image 2024 03 14 at 10.15.57

மீனவ மக்களுக்கு வலுவூட்டுவதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சும் இணைந்து செயற்றிட்டம் தயாரிப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அனுப்ப பெஸ்குவெல் ஆகியோர்களுக்கிடையில் 2024.03.12ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

இங்கு இராஜாங்க அமைச்சர் அனுப்ப பெஸ்குவெல் அவர்கள் கூறியபோது, அஸ்வெசும எனும் வேலைத் திட்டத்தின் கீழ் 12 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்டுவதற்கு மேன்மைதங்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனுமதி வழங்கியளித்துள்ளதாகவும், இதற்குத் தேவையான நிதி உலக வங்கியின் உதவியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய மீனவ மக்களுக்கு வலுவூட்டுவதற்குத் தேவையான வேலைத் திட்டம் தனது அமைச்சினால் தயாரித்துள்ளதாகவும், இது சார்பாக கடற்றொழில் அமைச்சின் நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் ஆலோசனை மற்றும் அறிக்கைக்கு அமைய அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு குறிப்பாக நன்னீர் மீன்பிடி கைத்தொழிலை ஊக்குவிப்பதற்கு, நன்னீர் நீர்நிலைகளுக்கு கிராமிய அமைப்புகளின் ஊடாக கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக மீன் குஞ்சுகளை நன்னீர் நீர்நிலைகளில் வைப்பிடுவதற்குத் தேவையான நிதி உதவி சங்கங்களுக்கு கடனாக பணம் வழங்க முடியுமென சுட்டிக் காட்டினார். இது தொடர்பான விடயங்களை நக்டா நிறுவனத்தின் அதிகாரிகளிடமிருந்து கேட்டறிந்த அமைச்சர், இதற்கு பொருத்தமான வேலைத் திட்டம் ஒன்றைத் தயாரித்து தனது அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இங்கு கருத்த தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இந்நாட்டில் 280,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதாகவும், உவர்நீர் மீன்பிடி மாவட்டங்களாக 15 இருப்பதாகவும், நன்னீர் மீன்பிடி நடவடிக்கை இலங்கையில் 24 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார். குறிப்பாக மீனவ சமூகம், கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள தேசிய மீனவ மகா சம்மேளனம் மற்றும் அதனுடன் இணைந்த மாவட்ட மீனவ அமைப்பு மற்றும் கிராமிய மீனவ அமைப்புகளின் கடற்றொழல் அமைச்சினால் மீனவ சமூகங்களை ஒன்று திரட்டப்பட்டுள்ளதாகவும், கிராமிய மட்டத்திலான 1500 இற்கும் மேற்பட்ட மீனவ அமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவூம் அமைச்சர் இந்த அமைப்புகளின் ஊடாக மீனவ மக்களை வலுவூட்ட முடியுமென மேலும் தெரிவித்தார். 

மேலும் கூட்டுறவூ மீனவ அமைப்பின் ஊடாகவும், மீனவ மக்கள் ஒழுங்கமைப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். இந்த சங்க உறுப்பினர்களை கூட்டுறவுத் திணைக்களம் மற்றும் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் ஊடாக வலுப்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார். இந்த வேலைத் திட்டத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான திட்டம் தயாரிக்கும்போது அமைச்சின் மற்றும் நிறுவனங்களின் அலுவலர்கள் இணைந்த குழுவொன்று அமைக்கப்படுமென கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி சோமரத்ன அவர்கள் தெரிவித்தார்.

தேசிய மீனவ மகா சம்மேளனத்தின் செயலாளர் திரு நெல்சன் எதிரிசிங்க அவர்கள்; மீனவ சம்மேளனத்தின் கட்டமைப்பு தொடர்பான விடயங்களை முன்வைத்தார். 

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள், நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி அசோக்கா, கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.             

WhatsApp Image 2024 03 14 at 10.15.58

 

சமீபத்திய செய்திகள்

Youtube