mini

இலங்கை கடற் பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு அரசு இலங்கை அரசிடம் கோரியிருந்தாலும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அதனை நிராகரித்துள்ளார்.

தமிழ்நாட்டு கடற்nhறழில் அமைச்சர் திரு அனிதா ராதா கிருஸ்ணன் அவர்களுடன் தொலைபேசி மூலம் தெடர்பு கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார். இந்த மீன்பிடி பிரச்சனைக்கு ராஜதந்திர மட்டத்தில் தீர்வு கிடைக்கும் வரை குறிப்பிட்ட காலத்துக்கு இலங்கை கடற் பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை முற்றாக நிராகரிப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் இந்நாட்டு கடல் வளங்களை கொள்ளையடித்து செல்வதை அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில், எதிர் காலத்தில் கலந்துரையாடல்களில் பங்கேற்பது குறித்து கவனம் செலுத்தவூள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையில் இலங்கை இந்திய மீன்பிடிப் பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு இலங்கை அரசு விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் எதுவித பதிலும் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் திரு அலி சப்ரி  அவரகள் தெரிவித்துள்ளார்.   

சமீபத்திய செய்திகள்

Youtube