WhatsApp Image 2024 03 11 at 10.31.29 AM

நீலப் பொருளாதார கொள்கைக்கு அமைவாக நிலைபேறாக உறுதிப்படுத்தி இலங்கையில் மீன்பிடிக் கைத்தொழில் தேசிய பொருளாதாரத்துக்கு பிரதான பங்களிக்கும் இடமாக மாற்றுவதற்கான இலக்குடன் பரிந்துரையை வழங்குவதற்கு  பொறியியலாளர் மங்கள திரு பீ.பி. யாப்பா அவர்களின் தலைமையில்; நிபுணத்துவ குழுவொன்றை மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக பொறியியலாளர் மங்கள திரு பீ.பி. யாப்பா அவர்கள் நியமிககப்பட்டுள்ளதுடன், இவர் முதலீட்டு சபையின் முன்னாள் தலைவராவார்.

.

இந்த நிபணத்துவ குழுவின் செயலாளராக நாரா நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி திருமதி கே.எச். பண்டாரநாயக்க அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு தம்மிக ரணதுங்கஇ, திரு சுசந்த கஹவத்த, நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ஜே.எச். அசோக்கா, நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திரு கமல் தெண்ணகோண் ஆகியோர் அடங்கலாக பல்வேறு துறைசார்ந்த 13 நிபுணர்களும் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2023.04.07ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் தற்போது இக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய பொருளாதாரத்துக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மீன்பிடிக் கைத்தொழில் வழிமுறைகளின் பிரவேசம் எனும் (ஒரு மூலோபாய கட்டமைப்பு) வரைவினை தயாரித்துள்ளது. அந்த வரைவூ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களிடம் கையளித்தது.

இந்த வரைவினை கடற்றொழில் அமைச்சுக்கு அறிமுகப்படுத்தும்போது, நிபுணத்துவ குழுவின் தலைவர் மங்கள திரு பீ.பி. யாப்பா அவர்கள் கூறியபோது, இலங்கையில் வாழ்வாதாரம் மற்றும் உணவூ பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கடற்றொழில் பிரிவினால் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதுடன், இலங்கை மக்களின் விலங்கு புரதத் தேவையில் 50% மீன்களில் இருந்தே பெறப்படுகிறது. இப்பெறுமதி உலக சராசரியைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தாலும், தேசிய பொருளாதாரத்துக்கு கடற்றொழில் பிரிவு தற்போது மிதமான பங்களிப்பைக் கொண்டுள்ளது. பெறப்படும் மீன் அறுவடையானது மீன் மற்றும் மீன் உற்பத்திகளின் மொத்த தேசிய நுகர்வூத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. இதற்கமைய ஏறத்தாழ 70 மில்லியன் அமெரி;க்க டொலர் மதிப்புள்ள இறக்குமதிகள் தேவைப்படுவதுடன் ஏற்றுமதியின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துhரகிழக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் போன்ற வரையறுக்கப்பட்ட சந்தைகளை இலக்கு வைத்து சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயாக ஈட்டப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது விருப்பத் தேர்வுகளின் பொது அமைப்பு GSP+  திட்டத்தில் நன்மைகள் இருப்பினும், கடந்த கால அனுபவத்தின் மூலம் நிருபித்துள்ளவாறு GSP+ இடைநிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டால்இ நன்மைகள் குறையும் அபாயமும் ஏற்படும். பாரம்பரிய மற்றும் பழமைவாத முறைகளைப் பின்பற்றும் ஏராளமான மக்கள் அத்துறையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களின் வாழ்க்கை நன்றாக இல்லை. சமுத்திர மீன்பிடிக் கைத்தொழிலுக்கு சிறிய அளவில், வளர்சசி அடையாத மேலும் அதிக எண்ணிக்கையிலான கண்ணாடி இழை (கண்ணாடி வலுவூ+ட்டப்பட்ட பிளாஸ்டிக்) (GRP) படகு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கடற்கரையைச் சுற்றி அமைந்துள்ள 24 மீன்பிடித் துறைமுகங்கள் அரசாங்க உடைமை மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. ஆனால் இந்த துறைமுகங்கள் ஏற்றுமதி சந்தைக்கு ஏற்ற கடுமையான தரத் தரங்களைக் கொண்டுள்ளன. அதாவது குறிப்பாக பொருத்தமான சுகாதார நிலைமைகளைச் சந்திப்பதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பம் இல்லை. நீர்வாழின செய்கை ஏற்றுமதிக்கு டூனா இன மீன் வகை தயாரித்தல் மற்றும் ஆழ்கடலில் மீன் பிடித்தல் போன்ற துறைகளில்  யாதேனும் சில செயற்பாடுகளில் குறைவு காணப்பட்டாலும்  இப்பிரிவுக்குள் துறையில் தனியார் முதலீடுகள் மிகக் குறைந்த மட்டத்தில் நிலவுகின்றது. இதற்கு மேலதிகமாக அனேக வளங்கள் அதிக மக்கள் தொகைக்கும் உட்பட்டுள்ளதுடன், பிராந்திய அமைப்புகளுக்கான தேசிய பொறுப்புகளுக்கு ஏற்ப சமுத்திர சூழல் தொகுதியில் நிலைபேறான ஒரு தீவர சவாலக மாறியுள்ளது. மொத்தத்தில் இப்பிரிவூ பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. மற்றும் கடுமையான தலையீடு செய்யப்பட்டாலும் அதன் தொடர் இருப்பு கேள்விக் குறியாக மாறிவிடும். இது சம்பந்தமான நிபுணத்துவ குழுவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் அபிவிருத்தி தொடர்பில் தௌpவான கண்ணோட்டம் கொண்ட அறிஞர் என்றும், அவர் இந்நாட்டின் தீவிர பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு முகங்கொடுத்து முற்றிலும் பாதிப்படைந்த நிலையில் இருந்த நாடாக இருந்தபோது இநநாட்டை கையேற்றதாகவூம்;இ குறிப்பாக உணவூப் பாதுகாப்பை பேணுவதுடன் பெரும் முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டு வரக்கூடிய மீன்பிடிக் கைத்தொழில் சர்வதேச மட்டத்துக் கொண்டு வந்துளள் இக்குழுவானது தமது பொறுப்புகளை விரைவாக நிறைவு செய்து நீலப் பொருளாதார கொள்கைக்கு ஏற்ப நிலைபேறான தன்மையை இலங்கையின் மீன்பிடித் தொழிலை தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராக  மாற்றி 2030ஆம் ஆண்டின்போது மொத்த தேசிய உற்பத்தி 1.68% பங்களிப்பை வழங்குதல் (2015 நிலையான சந்தை விலைக்கு அமைய) மற்றும் வருடத்துக்கு 01 பில்லயின் டொலர் ஏற்றுமதி வருமானம் ஈட்டும் தொழிலாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல் அவர்கள வழங்குவார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் அமைச்;சின் செயலாளர் செல்வி நயானா குமாரி சோமரத்ன, ஜனாதிபதி மேலதிக செயலாளர் திருமதி சாந்தினி விஜேவர்தன மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபத்திய செய்திகள்

Youtube