WhatsApp Image 2024 02 22 at 12.39.001

2024.02.21ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதி பணிப்பாளர் திரு பரங்கே மனுவேல் உள்ளிட்ட பிரிதிநிதிகள் குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்ளை சந்தித்தனர். 

இங்கு கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தபோது, இலங்கையில் சர்வதேச மட்டத்தில் மீனவ பிரசைகளாக மாற்றுவதற்கு FAO அமைப்பின் உதவியுடன் வரைவு மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய கடற்றொழில் சட்டம் ஒரு மாதத்துக்குள் மீனவ அமைப்புகளின் கருத்துக்களை உள்ளடக்கி முழுமையாக தயாரித்த பின் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதனை ஏற்றுக் கொண்ட பின் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பாராளுமன்றத்தில் கூடிய விரைவில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். இந்த சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய FAO அமைப்புக்கு  தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இலங்கையில் கடற்றொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்வதற்கு, எமது பின் அறுவடையைப் பாதுகாப்பதற்கு, நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த FAO அமைப்பு வழங்கிய உதவி மற்றும் தலையீட்டுக்கு மிகவும் நன்றியைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்நாட்டில் நீர்வாழின வளர்ப்பு மற்றும் கடலட்டைஇ கடல் தாவரங்கள் வளர்ப்புக்கும் இந்த FAO அமைப்பின் உதவி மற்றும் ஆலோசனையின் அவசியத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர், குறிப்பாக எதிர்வரும் காலங்களில் கடல் மீன் வளம் குறைவடையலாம், எனவே கூடுகளில் மீன் வளர்ப்புக்கு உதவி வழங்குமாறும், சர்வதேச மட்டத்தில் செயற்படுத்த வேண்டியுள்ளதால், இலங்கையிலும் முக்கியமாக மோதா மீன் இனத்தை வளர்ப்பதற்குத் தேவையான உதவியை வழங்குமாறும் FAO அமைப்பிடம் கோரப்பட்டுள்ளது.

இங்கு இலங்கையின் சமுத்திர வளங்களை இந்திய கடலடி இழுவை படகு மூலம் பாதிப்பை ஏற்படுத்தி சுரண்டிச் செல்வது இந்நாட்டு மீனவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது என சுட்டிக் காட்டிய அமைச்சர், எமது நாடு தற்போதைய பொருளாதார பிரச்சனைகளிலிருந்து விடுபடும் வரை எமது மீனவ மக்களின் பாதுகாப்பான வாழ்க்கையைப் பேணுவதற்கு அவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இங்கு FAO பிரதி பணிப்பாளர் தெரிவித்தபோது, அமைச்சரின் சகல கோரிக்கைகள் பற்றியும் தமது அமைப்பு கவனம் செலுத்துவதாகவும், இலங்கையில் மீனவ சமூகம் மற்றும் மீனவ சமூகத்தின் அபிவிருத்திக்கு தமது அமைப்பு அதிகபட்ச ஆதரவை வழங்குமெனவும் தெரிவித்தார். மேலும் புதிய சட்டத்தைத் தயாரிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஆதனை  செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு தமது அமைப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவூம் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி சோமரத்ன மற்றும் FAO அமைப்பின் பிரதி பணிப்பாளர் திரு பரங்கே மனுவேல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவூம் கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரகளும் கலந்து கொண்டிருந்தனர். 

சமீபத்திய செய்திகள்

Youtube