கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளராகப் புதிதாக நியமிக்கப்பட்ட கலாநிதி பீ. கே. கோலித்த கமல் ஜினதாச நேற்று (மே 21) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதையொட்டி அவரை வரவேற்கும் நிகழ்வும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு. சம்பத் மந்திரிநாயக்கவிற்குப் பிரியாவிடை கொடுக்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.