கௌரவ இராஜாங்க அமைச்சர்
கௌரவ பியல் நிஷாந்த த சில்வா
கடற்றொழில் இராஜாங்க அமைச்சு
தொலைபேசி | : | +94 112 446 188 |
பெக்ஸ் | : | +94 112 446 187 |
மின்னஞ்சல் | : | stateminister[at]fisheries.gov.lk |
எச்.எம். பியல் நிஷாந்த த சில்வா (பிறப்பு 1970 ஜூன் 30) இலங்கை அரசியல்வாதியூம் மற்றும் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினருமாவார்.
கல்வி
திரு பியல் நிஷாந்த அவர்கள் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை அலுத்கம தேசிய பாடசாலையில் கற்றார். அதன் பின்னர் அவர் தொலைதூரக் கல்வி நிலையத்தில் டிப்ளோமா பாநெறியை தோற்றினார் 1993ஆம் ஆண்டிலும் கலை மற்றும் திரையரங்கு பற்றிய ஆசிரியரானார்.
அரசியல் வாழ்க்கை
திரு.பியால் நிஷாந்த அவர்கள் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுவாமோதர கிராம உத்தியோகத்தர் பிரிவில் செயலாளராக தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். 1997 இல் பேருவளை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அவர் 2006 இல் பேருவளை பிரதேச சபையின் தலைவராக ஆனார்.திரு.பியால் நிஷாந்த அவர்கள் 1996 ஆம் ஆண்டு களுவாமோதர கிராம அலுவலர் பிரிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். 1997 இல் பேருவளை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அவர் 2006 இல் பேருவளை பிரதேச சபையின் தலைவராக ஆனார்.
2009ஆம் ஆண்டு மேல் மாகாண சபைக்குத் தெரிவானார். அவர், 2015ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக நாடாளுமன்றம் நுழைந்தார்.
அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவை பிரதிநிதித்துவப்படுத்தி 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் 16வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். 2020 ஆகஸ்ட் 12 அன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி, பாலர் மற்றும் ஆரம்பக் கல்வி, பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2022 செப்டம்பர் 08 அன்று, அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் இரண்டாவது அமைச்சரவையின் கீழ் கடற்றொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
- 2020 ஆண்டு - இலங்கையின் 16வது பாராளுமன்ற உறுப்பினர்
- 2015 - இலங்கையின் 15வது பாராளுமன்ற உறுப்பினர்
- 2014 - மேல் மாகாண சபை உறுப்பினர்
- 2009 - மேல் மாகாண சபை உறுப்பினர்
- 2006 - தலைவர், பேருவளை பிரதேச சபை
- 2001 - எதிர்க்கட்சித் தலைவர், பேருவளை பிரதேச சபை
- 1997 - பேருவளை பிரதேச சபை உறுப்பினர்
- 1996 - களுமோதர கிராம அலுவலர் பிரிவில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர்.