douglas

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

அமைச்சர்

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு  

 

 

 

திசாநாயக்க முதியன்செலாகே அனுர குமார திசாநாயக்க, உதவி நில அளவையாளராக இருந்த திசாநாயக்க முதியன்செலாகே ரண்பண்டா மற்றும் திசாநாயக்க முதியன்செலாகே சீலாவதி யுவல தம்பதிகளுக்கு மாத்தளை தேவஹூவ கிராமத்தில் 1968ஆம் ஆண்டு நவமப்ர் மாதம் 24 ஆந் திகதி இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார்.

தம்புத்தேகம ஆரம்ப பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியைப் பெற்ற அனுர குமார திசாநாயக்க, இதன் பின்னர்  தம்புத்தேகம மத்திய மஹா வித்தியாலயத்தில் அனுமதி பெற்று கல்வி பொதுத் தராதர சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு விஞ்ஞானம்-கணிதப் பிரிவில் தோற்றினார். பல்கலைக்கழக கல்விக்குத் தகுதி பெற்ற இவர் 1992ஆம் ஆண்டில் களனி பல்கலைக்கழத்தில் விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவானார். இதன் பின்னர் பல்கலைக்கழத்தின் பௌத்த சங்கத்தின் தலைவர் பதவி உட்பட பல்கலைக்கழக சமூக மற்றும் அரசியல் விவகார செயற்பாட்டாளராக இருந்த அனுர குமார திசாநாயக்க கல்வி நடவடிக்கையை முடித்து 1995ஆம் ஆண்டில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.       

அனுர குமார திசாநாயக்க அன்றிலிருந்து இந்நாட்டின் அரசியல் களத்தில் உருவாகிய ஆற்றல் மற்றும் முக்கியமான அரசியல் தலைவராக பாரம்பரிய அரசியல் உயர் குடும்பத்தைச் சேராத ஒருவராக இருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஜனரஞ்சக அரசியல் முற்போக்கு மற்றும் ஜனரஞ்சக நீரோட்டத்தில் முன்னோக்கி வந்தவர் என nரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அவரின் அரசியல் பயணம் பாடசாலை மாணவனாக இருந்தபோதே ஆரம்பமாகியது. 1987இல் அப்போதைய அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற மக்கள் எதிர்ப்புக்கு மாணவர் ஆர்வலராக பொதுப் போரட்டத்தில்  பங்களித்தமை மூலம் சோசலிஸ்ஸ மாணவர் சங்கத்தின் செயற்;பாட்டாளராக ஆனார்.

மீண்டும் அரச அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் விடுதலை முன்னணி மீள் மலர்ச்சியடைந்த பின்னர் 1993இன் காலப் பகுதியின் பின்னர் அரசியலுக்கு பிரவேசித்த இவர் பல்கலைக்கழக பருவத்தில் ஒரு சிறந்த மாணவர் ஆர்வலராக திகழ்ந்தார். மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்த சோசலிச மாணவர் சங்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இவர் அசாத்தியமான துணிச்சலுடன் உழைத்தார் அத்துடன் அரவிந்த எனும் பெயருடன் அக்காலத்தில் முழு பல்கலைக்கழக அமைப்பிலும் அவர் அனைவரினது அன்பையும், ஈர்ப்பையும் பெற்றிருந்தார். இந்த மாணவரின் அரசியல் செயற்பாட்டின் உச்ச கட்டத்தைக் குறிக்கும் வகையில் 1997இல் சோசலிச  மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அனுர குமார திசாநாயக்க அவர்களின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தைக் குறிக்கும் 1997இல் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவூக்குத் தெரிவானார். அதன் பின்னர் 1998இல் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்

1999இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராக மத்திய மாகாண சபைக்கு போட்டியிட்டார். 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலில் இருந்து போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க அவர்கள் முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இதன் பின்னர் 2001ஆம் ஆண்டில் பலவீனமான அரசாங்கம் தகுதிகாண் வேலைத் திட்டத்தின் கீழ் உட்படுத்தப்பட்ட அரசாங்கம் 17வது அரச அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஜனரஞ்சக நடவடிக்கை முன்னெடுப்பதில் அவர் முக்கிய பங்காற்றினார். மீண்டும் 2004இல் இவர் குருனாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்;. 2004இல் தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சராக கடமையாற்றிய இவர் அன்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத மகாத்தான முன்னுதாராணத்தை நாட்டுக்கு வழங்கியவர் என்பது பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாக உள்ளது.  பிரிவினைவாதத்தை வலுப்படுத்தும் சுனாமி நிவாரண சபையை நிறுவுவதற்கு அரசாங்கம் தயாரானபோது அதனை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு அமைச்சர்களும் அந்த கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறினர். இதற்கிடையில் 2008இல் அனுர குமார திசாநாயக்க அவர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2010இல் மக்கள் விடுதலை முன்னணியைப் உள்ளடக்கி ஜனநாயசார் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரக அவர் மீண்டும் பாராளுமனறத்துக்குத் தெரிவானார். 

அனுர குமார திசாநாயக்க அவர்களின் அரசியல் பயணத்தில் இது மிகவும் தீர்க்கமான தருணமாக 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 07வது தேசிய மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அமைந்தது. இவரது தலைமைத்துவத்தின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியை பிரபல்யப்படுத்துவதற்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மீண்டும் 2015இல் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். மேலும் 2015ஆம் ஆண்டு முதல் 2018 திசம்பர் மாதம் 14ஆந் திகதி வரையான காலப் பகுதிக்குள் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளராக அனுர குமார திசாநாயக்க அவர்கள் செயற்பட்டார். 2019ஆம் ஆண்டு ஓகஸ்து மாதமளவில் மக்கள் விடுதலை முன்னணி உட்பட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்பு மற்றும் அரசியல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து தேசிய மக்கள் சக்தி  எனும் பெயரில் புதிய அரசியல் செயற்றிட்டம் உருவாக்கப்பட்டது. பாரம்பரிய அரசியல் கட்சிகளால் அதிருப்தி அடைந்திருந்த மக்கள் அதைச் சுற்றி வேகமாக ஈர்க்கப்பட்டனர்.

2019 ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க அவர்கள் 3.16% வாக்குப் பெறுபேறான 418.553 வாக்குகளைப் பெற்றார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் பாராளுமன்றத்துக்கத் தெரிவு செய்யப்பட்டார். 

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, இலங்கை அரசியல் அரங்கில் மிகப் பெரிய முற்போக்கு வெகுஜன அமைப்பாக தேசிய மக்கள் சக்திகளை சுற்றி இந்நாட்டின் மக்கள் சக்திகளை திரட்டுவதற்கு நம்பமுடியாத தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட இவர் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், கலைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்களைக் கொண்ட ஒரு பெரும் மக்கள் இயக்கமாக தேசிய மக்கள் சக்தியை உருவாக்குவதில் இவர் தீர்க்கமான மற்றும் ஈர்க்கக்கூடிய    திட்டத்தை உருவாக்கி அதனை முன்னெடுத்தார். 2021 திசம்பர் மாதம் 20ஆந் திகதி நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் முதலாவது தேசிய மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் தலைமை தாங்கிய அனுர குமார திசாநாயக்க அவர்கள் மக்கள் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய மிகப் பெரிய மக்கள் திட்டமொன்றாக மாற்றுவதற்கான மாபெரும் பணியை அவர் நிறைவேற்றினார். இந்நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அனுர குமார திசாநாயக்க அவர்கள் போட்டியிட்டார். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டுக்கும் மக்களுக்கும் புதிய மறுமலர்ச்சிக்கான பாதையைக் காட்டிய இவர் நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரத்தைக் கொண்டு வருவேன் என தேர்தலின்போது மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அவரது சரியான அரசியல் கண்ணோட்டம் சரியாக முடிவெடுக்கும் திறன், ஆளுமை வசீகரம், தகவல் தொடர்புத் திறன் மற்றும் கூர்மையான பேச்சுத் திறன்இ இரக்கம், முன்மாதிரியாக இருப்பதாலும், மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப செயற்படும் திறமையாலும் அவரது தலைமைத்துவ ஆற்றலினால் இலங்கை மக்களுக்கு பலமான அரசியல் உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடியவராக அவர் திகழ்ந்தார். இவரது ஆளுமையைப் புரிந்து கொண்டதாலும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.

Youtube