நோக்கம்

கடற்றொழில் நீரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதியான பயன்பாடு சம்பந்தமாக தெற்கு ஆசிய வலயத்தில் அற்புத நாடாக ஆக்குதல்.

நடவடிக்கை

நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களின் பயன்பாட்டை உறுதியான நிலையில் முகாமைத்துவம் செய்தல்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலத்துக்கு முன்னரே பாரம்பரிய கைத்தொழிலாக இலங்கையில் இந்த கடற்றொழில் கைத்தொழில் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. இது கரையோர மக்களின் பிரதான பொருளாதார நடவடிக்கையாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் அலகாகும். முக்கியமாக 1948ஆம் ஆண்டளவில் இலங்கை பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்ட பின், சமுத்திர கடற்றொழில் கைத்தொழில் வாழ்வாதார நடவடிக்கையிலிருந்து ரூபா பில்லியன் அளவிலான கைத்தொழிலாக முறையாக தாபிக்கப்பட்டது. நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை என்பது 75 வருடங்களுக்கு குறையாத காலமாக அபிவிருத்தி அடைந்து வந்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இறால் செய்கை ஆரம்பிக்க்கப்பட்டுள்ளதுடன் 1980ஆம் ஆண்டின் முதற் பாதியில் கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அதிக காலத்துக்குப் பின்னர், இவ்வாறு 2010ஆம் ஆண்டளவில் சமுத்திர நீர்வாழ் உயிரினச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் கடற்றொழில் வளங்களின் அடிப்படையில் 517,000 சதுர கிலோ மீற்றர் அண்ணிய பொருளாதார வலயமும் 21,500 சதுர கிலோ மீற்றர் தேசிய நீர்ப் பரப்பையும், 1,580 சதுர கிலோ மீற்றர் கடனீரேரி மற்றும் ஆற்றுவாய் மூலமும், 5,200 சதுர கிலோ மீற்றர் மனிதர்களினால் தயாரிக்கப்பட்ட நீர்ப் பரப்பின் மூலமும் இதில் அடங்கும். மதகு, கடனீரேரி, நீர்நிலை மற்றும் கரையோர அத்தோடு நீரேரி சார்ந்து நிறுவப்பட்ட நிலமும் நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்திக்கு வளங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள விற்பனை சந்தை விலைமனுவின் கீழ் கடற்றொழில் மற்றும் செய்கைத் துறையினால் அண்ணளவான தேசிய உற்பத்தி ரீதியில் 1.4% பங்களிப்பு வழங்குகிறது. இதன் மூலம் 575,000 நபர்கள் (நாட்டின் வேலைப் படையினர் 3.7%) மட்டும் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொழில் சந்தர்ப்பத்தை வழங்குகின்றனர். 1300 மில். அ. மெ. டொலருக்கும் மேற்பட்ட பெறுமதி சேர்த்து தற்போது (2017) வருடாந்த மீன் உற்பத்தி 530,000 தொன்னுக்கும் அதிகமாகும். டூனா வகை, இறால், சிங்கி இறால், நண்டு, கடலட்டை, அலங்கார மீன் உட்பட அனைத்த மீன் உற்பத்தியிலும் 5% வரை ஏற்றுமதி செய்து இந்த துறையினால் 250 மில்லியன் அமெ. டொலருக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுகின்றது. பொதுமக்களின் பிரதான விலங்குணவு புரொட்டீனானது மீன் நுகர்விலிருந்தே ஈடு செய்யப்படுகிறது. நாட்டின் அனைத்து மீன் நுகர்வுத் தேவையில் 65% தற்போது நிறைவு செய்யப்படும் தேசிய மீன் வழங்குனர்களாக இருப்பதுடன் மிகுதியானவை ஏற்றுமதி செய்வதற்காக வழங்கப்படுகிறது. தேசிய கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை உற்பத்தியின் மூலம் அனைத்து மீன் தேவையை நிறைவு செய்தல் அல்லது மாற்றாக மீன் ஏற்றுமதியின் வருமானத்தின் ஒரு பகுதியிலிருந்து தேசிய நுகர்வுக்காக மேற்கொள்ளப்படும் மீன் ஏற்றுமதியில் செலவை நிறைவு செய்வதற்கு அரசு எதிர்பார்க்கின்றது.

குறிக்கோள்கள்

கடற்றொழில் மற்றும் நீரியல் செய்கைத் துறைக்குள் இந்த புதிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பின்வரும் குறிக்கோள்களை அடைவதது அரசின் எதிர்பார்ப்பாகும்.

  • விஞ்ஞான அடிப்படையில் (science – based) தகவல்களைப் பயன்படுத்தி வளங்களை உறுதியாக முகாமைத்துவம் செய்தல். 
  • பிராந்திய மற்றும் சர்வதேச பொறுப்புகளுக்கு அமைவாக மேற்கொள்ளல்.
  • சமுத்திர கடற்றொழில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல்.
  • நீர்வாழ் உயிரினச் செய்கை மற்றும் நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல்.
  • பின்அறுவடையின் பாதிப்பைக் கட்டுப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்வை அதிகரித்தல்.
  • தனிநபர் மீன் நுகர்வை அதிகரித்தல்.
  • ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல்.
  • பொழுதுபோக்கு செயற்பாடு, தொழில் மற்றும் செயற்றிட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தற்போதுள்ள நிலையை மேம்படுத்தல்.
  • மீனவ பிரசைகளின் சமூகப் - பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்தல்.
Youtube